பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189


படுத்துவார்கள். ஆனால் பாலர் கம்பெனிகளில் இந்தக் கொடுமை யெல்லாம் இல்லை. துருவச் சரித்திரத்தில் மட்டும் ஆங்கிலம் எப்படியோ இடம் பெற்று விட்டது.

துருவன் நாடகத்தில் ஒரு காட்சி. துருவனும், உத்தான பாத மகாராஜாவின் இளையாள் பிள்ளை உத்தமனும் விளையாடும் காட்சி அது. அந்த நாளில் எல்லாம் பாடல்கள்தானே! பிள்ளைகள், பாடல்களிலேயே விளையாடுகிறார்கள். பிள்ளைகள் கூடி விளையாடும் இடத்தில் விகடப் பையனும் ஒருவன் இருந்தாக வேண்டுமே!...... துருவன் பாடியதும், விகடப் பையனாக வேடம் புனைந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் பாடுவார்:

டென்னிஸ் புட்பாலடித்து
    ரவுண்டர்ஸ் பிளே செய்திடுவோம்
டிபன் கொஞ்சம்எடுக்க
    டி காபி பார்த்திடுவோம்

பாடலைக் கவனித்தீர்களா? டென்னிஸ், புட்பால் இவைபோன்ற விளையாடல்களை எல்லாம் துருவனும், உத்தமனும் விளையாடுகிறார்கள்! எப்படி? அந்தக் காலத்துப் புராண இதிகாச நாடகங்களில் ஆங்கில மொழி எப்படி ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. பார்த்தீர்களா? இந்தக் கேலிக் கூத்தையெல்லாம் பொது மக்கள் அமோகமாக ரசிக்கத்தான் செய்தார்கள்!

பக்த ராமதாஸ் தயாரிப்பு

பக்த துருவனில் மகத்தான வெற்றியைக் கண்டதும். தம்புடு பாகவதர், மற்றொரு சிறந்த காலட்சேபக் கதையான பக்த ராமதாசையும் எங்களது வேண்டுகோளுக்கிணங்கி நாடக. மாக்க முனைந்தார். காரைக்குடி முடிந்து, சிவகங்கை சென் றோம். பக்த ராமதாஸ் பாடம் கொடுக்கப்பட்டது. வழக்கம் போல் எல்லோருக்கும் பாடல்களை முதலில் சொல்லிக் கொடுத். தார் பாகவதர். துருவச் சரித்திரத்தில் அவர் பாடல்களைச் சொல்லிக் கொடுத்தபோதே கணத்த குரலில் அவர் பாடும். பாணி, சாதாரணமாகச் சிலருக்கு நகைப்பையே உண்டாக்கும்.