பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195


சுண்டூர் இளவரசன்

நான் சுண்டூர் இளவரசனாக நடித்தேன். சின்னண்ணா சந்திரவதனாவாக நடித்தார். சந்திரகாந்தாவில் சுண்டூர் இளவரசன் ஒரு பொறுப்பான பாத்திரம். அந்த வேடத்திற்கு எனக்கென்றே தனியாக வாத்தியார் ஒரு ஆங்கில வசனம் எழுதினார். அந்த வசனம் ஒரு சிறந்த கவிதைபோல் அமைந்திருக்கும். அதற்குத் தெளிவாகப் பொருள் கூறிச் சொல்லிக் கொடுத்தார். அந்த ஆங்கில வசனத்தை நான் பேசியபொழுது ரசிகர்கள் மகிழ்ச்சி யோடு கைதட்டிப் பாராட்டினார்கள். சுண்டுர் இளவரசன் வேடத்தில் எனக்குப் பெரிய வரவேற்புக் கிடைத்தது. அந்த நாளில் நான் நடித்த பாத்திரங்களில், எனக்கு மிகவும் பிடித்தமான பாத்திரம் சுண்டூர் இளவரசன்தான்.

மாமாவுடன் மனத்தாங்கல்

ஆஸ்பத்திரியிலிருந்து தம்பி பகவதி உடல் நலமாகி வீடு வந்து சேர்ந்தான். டைபாய்டு ஜுரம் அவனை உருக்குலைத்திருந்தது. மிகத் தெளிவாகப் பேசிக் கொண்டிருந்த பகவதியின் வார்த்தையில் இப்போது தடுமாற்றம் காணப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வந்து சேர்ந்தோம். நாகர் கோவிலில் நாடகம் தொடங்கியது. அப்போது கைவசமிருந்த சொற்பத் தொகையைக் கொண்டு நாகர்கோவிலில் ஒரு நிலம் வாங்க எங்கள் தாயார் திட்டமிட்டார்கள். மாமா செல்லம் பிள்ளை ஒரு நிலம் பார்த்து வந்தார். அந்த நிலம் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. அது சம்பந்தமாக அம்மாவுக்கும், மாமாவுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. வார்த்தை வளர்ந்தது. மாமா ஏதோ தவறாகப் பேசினார். அம்மா மாமாவைக் கன்னத்தில் அறைந்து விட்டார்கள். அவர்கள் தம்பி என்ற முறையில் அடித்தாலும், அவ்வளவு பெரியவரை அடித்தது எங்களுக்கெல்லாம் கஷ்டமாகவே இருந்தது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பெரியண்ணாவுக்கும், மாமாவுக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டது. அடுத்த ஊர் திருவனந்தபுரம் வந்ததும் மாமா, கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார். அவருக்கும் பெரியண்ணாவுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணத்தை அறிய எங்களால் முடியவில்லை. பெரிய