பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206


உபத்திரவம் செய்வார். ஒருநாள் தம்பி பகவதியைப் பிரியத்தோடு தூக்கிக் கீழே போட்டுவிட்டார். வேண்டுமென்று போட வில்லை. குடிவெறியில் தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில் அவ்வாறு நேர்ந்துவிட்டது. இந்தச் செய்தி சிற்றப்பா காதுக்கு எட்டியதும் அவர் சண்முகம் பிள்ளையிடம் புகார் செய்தார். மூக்குப்பரியைக் கண்டிப்பதாகச் சண்முகம்பிள்ளைக் கூறினார். மூக்குப்பரியின் அட்டகாசம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஒருநாள் பிற்பகலில் மூக்குப்பரி நன்றாகக் குடித்துவிட்டு வந்து வழக்கம்போல் ரெளடித்தனம் செய்துகொண்டிருந்தார். செய்தி அறிந்ததும் கம்பெனி வீட்டிலிருந்து எல்லோரும் ஓடினார்கள். முதலில் போன கம்பெனி பலசாலி கோபாலபிள்ளை, மூக்குப் பரியை ஒரே அறையில் கீழே வீழ்த்தினார். சிற்றப்பா மூக்குப்பரியை இடுக்குப் பிடிப்போட்டுப் பிடித்துக்கொண்டார். அந்தப்பிடி இரும்புப் பிடியாக இருந்தது. கம்பெனியில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் மூக்குப்பரியை ஆசை தீர அடித்துத் தமது வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். பெரியண்ணா ஒருவர் மட்டும் இந்த அடிதடியில் கலந்துகொள்ளவில்லை. அடித்துக் கட்டிப் போட்டுவிட்டு எல்லோரும் போய்விட்டார்கள். சற்று நேரம் கழித்துப் போதை தெளிந்தபின் அவர் எழுந்தார். கொட்டகையைவிட்டு வெளியே வந்தார். அவருக்குத்துணையாக ஒரு பெருங்கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தாரைத் திரட்டிக் கொண்டு மீண்டும் கொட்டகைக்குள் நுழைந்தார்.

அப்போது நாவல் நாடகங்களில் பயன்படுத்துவதற்காக நாங்கள் ரிவால்வர் வைத்திருந்தோம். பொய்த் தோட்டாக்களை உபயோகிப்பதற்குத்தான் அனுமதி இருந்தது. ஆனால் உண்மையான தோட்டாக்களை உபயோகிக்கவும் அனுமதி இருப்பதாக ஒரு வதந்தியைப் பரப்பி விட்டிருந்தோம். நாடகங்களில் நாங்கள் ரிவால்வர் உபயோகிப்பதை மூக்குப்பரி பார்த்திருந்தார். எனவே இந்த வதந்தியை அவரும் நம்பியிருந்தார். சிற்றப்பா ரிவால்வரைக் கையில் வைத்துக்கொண்டு கலகக் கூட்டத்தார் யாராவது கம்பெனி வீட்டிற்குள் நுழைந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவதாகப் பயமுறுத்தினார். உயிருக்குப் பயந்த கலகக் கூட்டம் உள்ளே நுழையாமல் வாயிலுக்கு வெளியிலேயே நின்று