பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

217


திருவாங்கூர் போலீசார் கூறிவிட்டார்கள். கைதியைப்போல் கையில் விலங்கு பூட்டப்பட்டுக் கலைவாணர் கால்நடையாகவே கொல்லம்வரை அழைத்துச் செல்லப்பட்டதாக அறிந்து எல்லோரும் வேதனைப்பட்டோம். வேறு முயற்சிகள் எடுத்துக் கொள்ளக்கூடிய வசதிகள் ஏதுமில்லாததால் சக்தியற்ற நிலையில் புலம்பிக் கொண்டிருந்தோம். பெரியண்ணா மீதும், சிற்றப்பா மீதும் எங்களுக்கெல்லாம் வருத்தம் ஏற்பட்டது. மதுரையில் ஏதோ செய்யப் போவதாக எண்ணியிருந்தோம். மதுரையி லிருந்த எங்கள் நண்பர்கள் வீரமணி ஐயருக்கும் கிட்டு ராஜு விக்கும் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டது. ஜெகன்னதய்யரின் சூழ்ச்சியின் முன், அவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் என். எஸ். கிருஷ்ணனின் தந்தையார் மதுரைக்குச் சென்று, கிருஷ்ணனை ஐயர் கம்பெனியிலேயே இருக்கச் செய்த பிறகுதான் திருட்டு வழக்கு வாபஸாயிற்று. கம்பெனியிலிருந்து விலகிச் செல்லும் நடிகர்கள்மீது இவ்வாறு திருட்டுக் குற்றம் சுமத்துவதும், போலீஸாரைக் கையில் போட்டுக் கொண்டு தொல்லைகள் கொடுப்பதும், விடுபட இயலாத சூழ்நிலையை உண்டாக்கி அவர்களை மீண்டும் தங்கள் கம்பெனியில் சேர வைப்பதும் அன்று சில குறிப்பிட்ட நாடக முதலாளிகளின் வழக்கமாக இருந்து வந்தது.

இரு சகோதரர்கள்

பெரியண்ணாவுக்குத் திருமணம் முடிந்து புறப்பட்டபோது இரு சகோதரர்கள் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார்கள். மூத்தவர் என். எஸ். பாலகிருஷ்ணன். இளையவர் என். எஸ். வேலப்பன். இருவரும் வெகு விரைவில் முன்னுக்கு வந்தார்கள். என். எஸ். பாலகிருஷ்ணன் கம்பெனியின் முக்கிய பெண் வேடதாரியாக விளங்கினார். வேலப்பனும் மாயா சூர்ப்பனகை போன்ற பாத் திரங்களில் மக்களின் புகழ்ச்சிக்குப் பாத்திரமானார். பால கிருஷ்ணன் சிறந்த முறையில் நடித்து வந்ததோடு, ஒய்வு நேரங் களில் ஆர்மோனியமும் பயின்று வந்தார். எதிர்காலத்தில் அவர் ஒருசங்கீத டைரக்டராகத் திகழுவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆம்; பிற்காலத்தில் பிரபலத் திரைப்படப் பின்னணி