பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220


பெட்டியைப் பற்றிய நினைவே எனக்கில்லை. வரல்லை. வழக்கம் போல் உறக்கத்தில் ஈடுபட்டோம். பொழுது விடிந்தது. அப்போது பெட்டியைப் பற்றிய நினைவு வரவில்லை.வெளியில் யாரோ அழைப்பதாக ஒரு பையன் சிற்றப்பாவைக் கூப்பிட்டான். அழைத்தவரின் பெயரைக் கேட்டதும் சிற்றப்பா விரைவாகச் சென்றார், ஒருமணி நேரத்திற்குப்பின் முன்னால் இரவு தவற விட்ட பெட்டியோடு திரும்பி வந்த அவரைக் கண்டதும் எனக்கு ‘பகீர்’ என்றது. இரவு திண்ணையில் வைத்த பெட்டியை உள்ளே எடுத்துவர மறந்தது அப்போதுதான் நினைவு வந்தது.

ஆலப்புழையில் திரு. ராஜப்ப ரெட்டியார் என்பவர் பெரிய வணிகர். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே அவரது வீடு இருந்தது. வழக்கம்போல் அதிகாலையில் உலாவப் புறப்பட்ட அவர், கருக்கிருட்டில் திண்ணையில் ஒரு பெட்டியிருப்பதைக்கண்டு சுற்றுமுற்றும் பார்த்திருக்கிறார், எங்கும் யாரையும் காணவில்லை. சற்றுநேரம் நின்று பார்த்துவிட்டு, பெட்டியை அவரே எடுத்துக் கொண்டு போயிருக்கிறார். வீட்டுக்குச் சென்று பெட்டியைத் திறந்து பார்த்ததும் அவருக்குத் தூக்கிவாரிப்போட்டது. மெடல்களிலிருந்த பெயர்களைப் பார்த்ததும் அவருக்கு உண்மை விளங்கி விட்டது. உடனே சிற்றப்பாவுக்கு ஆளனுப்பியிருக்கிறார், *சின்னப்பிள்ளைகள் மறந்தாலும், “பெரியவராகிய நீரல்லவா பெட்டியைப் பத்திரமாகக் கொண்டு போயிருக்க வேண்டும்!” என்று சிற்றப்பாவையும் கடிந்துகொண்டார் அவர். எங்களுக்குப் பொருளாதார நெருக்கடி அதிகமாயிருந்த அந்த நேரத்தில், ! நாங்கள் அப்பெட்டியை இழந்திருந்தால் என்ன ஆயிருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தபோது எங்களுக்கு உண்மையிலேயே அழுகை வந்துவிட்டது. பெட்டி ஒரு உத்தமமான மனிதரின் கையில் கிடைத்ததற்காக இறைவனுக்கு வணக்கம் செலுத்தினோம். 1931-இல் கம்பெனிக்கு மிகப்பெரிய கஷ்டம் வந்த காலத்தில் இந்தப் பெட்டியிலிருந்த விலையுயர்ந்த பொருட்கள் தான் எங்களுக்கு உதவின என்பதை எண்ணிப்பார்க்கும்போது இப்போதும் அந்த உத்தமமான மனிதரை நினைத்துக் கொள்கிறோம்.