பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

221


மீண்டும் கலைவாணர் வந்தார்

ஆலப்புழைக்குப் பிறகு கோட்டயம், கொச்சி, திருச்சூர், பொள்ளாச்சி முதலிய பல ஊர்களுக்குச் சென்றோம். எங்கும். வருவாய் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டோம். சிலமாதங்களுக்குப் பின் கரூர் வந்து சேர்ந்தோம். திடீரென்று ஒரு நாள் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. என். எஸ். கிருஷ்ணன் எழுதியிருந்தார். ஜெகன்னதையர் கம்பெனி யாழ்ப் பாணத்தில் கலைந்துவிடக் கூடிய நிலையில் இருப்பதாகவும், அப்படி ஏற்படுமானல் மீண்டும் எங்கள் கம்பெனிக்கே வந்து விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தச் செய்தி எங்களுக்குப் பெரு, மகிழ்ச்சி அளித்தது. ஒரு வாரத்திற்குப்பின் என். எஸ். கிருஷ்ணன் தந்தி கொடுத்திருந்தார். ஐயர் கம்பெனி கலைந்து விட்டதாகவும், உடனே பணம் அனுப்பும்படியாகவும் வந்த தந்தியைக் கண்டதும், பெரியண்ணா மகிழ்ந்து தந்தி மணியார்டர் அனுப்பினார். கிருஷ்ணன் மூன்று நாட்களில் கரூருக்கு வந்துசேர்ந்தார். ஜெகன்னதையர் கம்பெனிச் செய்திகளையெல்லாம் கதை. கதையாகச் சொன்னார். ஒரு வார காலம் அவர் கூறிய சுவையான கதைகளைக் கேட்பதிலேயே பொழுதைப் போக்கினோம்.

புதிய இளைஞர்

கரூரில் புதிய இளைஞர் ஒருவர் எங்கள் குழுவில் சேர்ந்தார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். அங்குள்ள பிள்ளையார் கோயிலில் அர்ச்சகராக இருந்தவர். வைதீகப் பிராமணர்போல் குடுமி வைத்திருந்தார். சுமாராகப் பிடில் வாசிக்கக் கூடியவர். தம்மோடு ஒரு பிடிலையும் கொண்டு வந்திருந்தார். சின்னண்ணாவும் பிடில் வாசிக்கக் கூடியவரானதால் அவரும் புதிய இளைஞரும் அடிக்கடி பிடில் வாசித்து வந்தார்கள். இளைஞருக்கு நல்ல வாட்டசாட்டமான சரீரம். சாரீரமும் அதற்கேற்றபடி அமைந்திருந்தது. அப்போதெல்லாம் இரணியன், எமதருமன், கடோற்கஜன் முதலிய பாத்திரங்களை எல்லாம் எங்கள் பெரியண்ணா டி. கே. சங்கரன் தாம் ஏற்று நடிப்பது வழக்கம். அவர் தம் வேடங்களை ஒவ்வொன்றாகக் குறைத்துக் கொண்டு வந்தார். புதிதாக வந்த இளைஞர் இரண்டொரு நாடகங்களில் சில்லரை