பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
துன்பத்திலும் சிரிப்பு

கரூரிலிருந்து புதுக்கோட்டைக்குச் சென்றோம். அப்போது மழைக்காலம். புதுக்கோட்டையில் கடுமையானமழை. வசூலே இல்லாமல் மிகுந்த சிரமப் பட்டோம். பெரியண்ணா நிலத்தை அடமானம் வைத்துப் பணம் கொண்டு வர நாகர் கோயிலுக்குப் போயிருந்தார். புதுக்கோட்டையில் நான்கு புறங்களிலும் பெரு மழையால் உடைப்புகள் ஏற்பட்டு விட்டன. புதுக்கோட்டை ஒரு தீவுபோல ஆகிவிட்டது.

ஒரு நாள் சாவித்திரி நாடகம். வசூல் ஏழே ரூபாய்கள். ஆனாலும் நாடகத்தை நிறுத்தாமல் நடத்திைேம். மின்சார விளக்குக்காகத் தனியே பாலகிருஷ்ண சாஸ்திரி என்பவரிடம் ஒப் பந்தம் செய்திருந்தோம். அவரது இஞ்சின் மூலம் எங்களுக்கு மின்சாரம் கிடைத்து வந்தது. அந்த இஞ்சின், கொட்டகையின் பின்புறம் ஒடிக் கொண்டிருந்தது. மழையின் வேகத்தால் இஞ்சின் புதைந்திருந்த இடம் முழுவதும் வெள்ளக் காடாகி விட்டது. இஞ்சின் ஒடவில்லை. கொட்டகையில் இருள் சூழ்ந்தது. வழக்கம்போல் இரண்டு கியாஸ் லேட்டுகள் மேடையில் வைக்கப் பட்டன. சாவித்திரி நாடகம் தொடர்ந்து நடந்தது. அன்று நான் சத்தியவானக நடித்தேன். என். எஸ். கிருஷ்ணன் சுமாவியாக நடித்தார். சத்தியவானின் திருமணச் செய்தியைச் சுமாலியிடம் சொல்லியனுப்புகிறார்கள். சுமாவி ஒரு கிழவனுக மாறுவேடம் பூண்டு வந்து, சத்தியவானுக்குக் கோபத்தை மூட்டுகிறான். சத்தியவான் கோபத்தில் அவனது தாடியைப் பிடித்து இழுக்க, தாடி கையோடு வந்து விடுகிறது. உண்மை வெளியாகிறது. இந்தக் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. என். எஸ். கிருஷ்ணன் அன்று கிழவகை வேடம் பூண்டு வந்து செய்த