பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226


வேடிக்கைகள்-கற்பனைகள் எனக்குத் தாங்க முடியாத சிரிப்பை யுண்டாக்கின. கோபிக்க வேண்டிய நான், சிரித்துக் கொண்டே நின்றேன். உடனே என். எஸ். கிருஷ்ணன் “நான் என்ன செய் தாலும் உனக்குக் கோபம் வராது போலிருக்கிறதே? “ என்றார், நான், “நீர் யாரென்று எனக்கு நன்றாகத்தெரியும். சத்தியவானை உம்மால் ஏய்க்க முடியாது” என்று கூறிக்கொண்டே அவர்கட்டி யிருந்த தாடியை இழுத்தேன். அவரும் நான் இப்படிச் செய்வே னென்று எதிர்பார்க்கவில்லை. விழுந்து விழுந்து சிரித்தார். சபை யில் அங்கொருவர் இங்கொருவராக அமர்ந்திருந்த பொது மக்க ளும் எங்கள் விளையாட்டைப் பார்த்துச் சிரித்தார்கள். துன்பமய மான அந்த நேரத்திலும் எங்களுக்குச் சிரிப்பூட்டி இன்பத்தைத் தந்த அந்தப் பொன்னை நாட்களை என்னல் மறக்க முடிய வில்லை.

வெள்ளத்தில் நீந்தினார்

நிலத்தை அடமானம் வைத்துப் பணம் கொண்டுவரச் சென்ற பெரியண்ணா, பணத்தோடு திரும்பினார். புதுக்கோட் டைக்கு அவர் வரமுடியாமல் மழையில் ஏற்பட்ட உடைப்புகள் தடுத்தன. எங்கும் ஒரே வெள்ளக் காடு. காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் இடையே பாதை உடைப்பெடுத்துக் கொண்டது. காட்டாறு கரை புரண்டு ஓடியது. பெரியண்ணாவின் வருகையை ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நெருக்கடியான நிலைமை.

பணத்துடன் வந்த பெரியண்ணா வெள்ளத்தைக் கண்டார்; சிந்தித்தார். வெள்ளம் குறைந்த பின் போகலாமென்று எண்ண வும் இடமில்லை. மழை மேலும் பெய்துகொண்டே இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தார். வேட்டி, சட்டையைக் களைந்து எல்லா வற்றையும் பணத்தோடு தலையில் கட்டிக் கொண்டார். ஒடும் வெள்ளத்தில் குதித்து நீந்தத் தொடங்கினார்.அவருடைய இந்தத் துணிவைக் கண்டு, கூடி நின்ற மக்கள் எல்லோரும் வியப்படைந் தார்கள். பெரியண்ணா நன்முக நீந்தக் கூடியவர். சிறிதும் அஞ்ச வில்லை, துணிவோடு நீந்தி மறு பக்கம் வந்து சேர்ந்தார். பெரி யண்ணா வந்து, தாம் நீந்தி வர நேர்ந்த நிலைமையைப் பற்றிச் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் பயமாகஇருந்தது. கம்பெனி