பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

227


யின் இந்தக் கஷ்டமான நிலையிலும் நடிகர்கள் அன்போடு மனம் கலங்காது ஒத்துழைத்தார்கள்.

நகைச்சுவை நடிகர் சிவதாணு

புதுக்கோட்டையில் கம்பெனி இவ்வாறு தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில், அம்மா நாகர்கோவிலுக்குப் போய்த் திரும்பியபோது சிவதானுவையும் அழைத்து வந்தார்கள். சிவதாணு எங்கள் ஒன்றுவிட்ட தமக்கை மீனாட்சியம்மையாரின் புதல்வர். பள்ளிக்கூடத்தில் மிகவும் குறும்புகள் செய்து கொண்டிருந்த சிவதாணுவை எங்கள் தமக்கையார்,தாயாரோடு அனுப்பி வைத்தார்கள். சிவதாணுன்வக் கண்டதும் எங்கள் குழுவிலிருந்த நடிகர்கள் சிரித்தார்கள். பார்ப்பதற்கு முரட்டுத் தனமாக இருந்த சிவதாணு, ஒரு நகைச்சுவை நடிகராக வரக் கூடுமென்று யாரும் எண்ணவில்லை. புதுக்கோட்டையில் அம்மாவுக்கு உடல் நலம் குன்றியது. படுக்கையிலேயே கிடந்தார்கள். இந்நிலையில் நாங்கள் காரைக் குடிக்குப் பயணமானோம். காரைக்குடி வெற்றி விநாயகர் தியேட்டரில் நாடகம் தொடங்கியது. அம்மா மட்டும் புதுக் கோட்டையிலேயே இருந்தார்கள். காரைக்குடியில் அமோகமாக வசூலாயிற்று. நாவல் நாடகங்களுக்கு நல்ல பேர். புதுக்கோட்டையில் திண்டாடிக் கொண்டிருந்த கம்பெனிக்குக் காரைக்குடி வசூல் வியப்பை அளித்தது.

சீனிவாசபிள்8ள கம்பெனி

அப்போது காரைக்குடி ஷண்முக விலாஸ் தியேட்டரில், பிர சித்தி பெற்ற சீனிவாசபிள்ளை கம்பெனியார் நடித்து வந்தார்கள். ஏராளமான காட்சியமைப்புக்களும், கண் கவரும் உடைகளும் வைத்திருந்த பெரிய கம்பெனி அது. அவர்கள் இராமாயணம், மகாபாரதம், மயில் இராவணன், புல்புலையான், அலியாதுஷா முதலிய நாடகங்களையெல்லாம் நடித்தார்கள். புல்புலையான் நாடகத்தில் மேடையிலேயே இரயில் ஒடுவதுபோல் காண்பிப்பார்கள். அவ் வளவு பெரிய கம்பெனிக்கு ஐம்பது, நூறுதான் வசூலாகியது. அதே நேரத்தில் பழைய ஓட்டை உடைசல் சாமான்களை வைத்துக் கொண்டு நாடகங்களை நடித்த எங்களுக்கு ஆயிரம்