பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

ரூபாய்கள் வரை வசூலாயிற்று. எங்களுடைய சிறுவர் கம்பெனி, பெரியவர்கள் கம்பெனிக்குப் போட்டியாக நின்று சமாளித்து, வெற்றியும் அடைந்தது. சீனிவாசபிள்ளை கம்பெனியார் வேறு ஊருக்கு மாற்றிக் கொண்டு போய் விட்டார்கள். எங்கள் நடிகர்களுக்கு ஒரே குதூகலம். திடீரென்று ஒருநாள் அம்மா அபாயகரமான நிலையிலிருப்பதாகத் தகவல் வந்தது. நாடகம் முடிந்ததும் நண்பர் ஒருவர் உதவிய காரில் நாங்கள் நால்வரும் இரவோடிரவாகப் புதுக்கோட்டைக்கு வந்தோம்… அந்தக் கண்டத்திலிருந்து அம்மா ஒருவாறு தப்பிப் பிழைத்தார்கள்.

குடந்தையில் காலரா காரைக்குடி நாடகம் முடிந்த பின் திருவாரூரில் ஒரு மாத காலம் நடித்து விட்டுக் கும்பகோணம் வந்தோம். வாணி விலாஸ் தியேட்டரில் நாடகங்கள் நடைபெற்று வந்தன. கும்பகோணத்தில் அப்போது காலரா நோய் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அந்நோய் முதன்முதலாக என்னையும், என். எஸ். பாலகிருஷ்ணனையும் பீடித்தது. எங்கள் இருவருக்கும் அம்மாவே பல மருந்துகள் கொடுத்தார்கள்.

நோயோடு போராடிக் கொண்டே நாங்கள் இருவரும் தொடர்ந்து நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அம்மாவில் மருந்து எங்கள் நோயைக் குணப்படுத்தியது. நாடகத்திற்கு வசூல் மிக மோசமாக இருந்தது. இந்நிலையில் கம்பெனியில் முக்கிய வேடம் தாங்கி வந்த சுப்பையா என்னும் சிறுவனுக்குக் காலரா நோய் கண்டது. சுப்பையா நல்ல நடிகன்; பாடங்களை விரைவாக நெட்டுருப் போடும் ஆற்றல் வாய்ந்தவன். ஒரு சமயம் மேனகா நாடகத்தில் மேனகா பாடத்தை ஒரே நாளில் பாடம் செய்து நடித்தவன். அவன் மீது எல்லோரும் அபிமானம் வைத்திருந்தோம். அவன் திடீரென்று நோய் கண்ட இரண்டாம் நாளே இறந்து விட்டான். இந்த எதிர்பாராத அதிர்ச்சியால் நாடகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சின்னண்ணா டி.கே.முத்துசாமிக்குக் காலரா நோய் கண்டது. ஏற்கனவே மனநோய் பிடிந்திருந்த நிலையில், அம்மாவினால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடிய