பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

229


வில்லை . அவர்கள் என்னென்னவோ மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார்கள். எதுவும் பயனளிக்கவில்லை.

டாக்டர் சாம்பசிவய்யர்

அப்போது கும்பகோணத்தில் டாக்டர் சாம்பசிவய்யர் பிரசித்தி பெற்ற டாக்டராக இருந்தார். அவரிடம் சின்னண்ணாவைக் கொண்டு போய் வந்தோம். அவரும் ஏதோ மருந்து கொடுத்தார்; ஊசி போட்டார்; வீட்டுக்கும் வந்து பார்த்தார். “பிழைப்பது கடினம். ஏதோமுயல்கிறேன்.இறைவன் திருவருள்’ என்று சொல்லிப் போய்விட்டார். இந்தச் செய்தி அறிந்ததும், அம்மாவுக்கு ஆறுதல் கூற முடியவில்லை. சின்னண்ணா முன்னிலையில் அழக்கூடாதென்று சொல்லி அம்மாவை ஒருவாறு சாந்தப் படுத்தினோம். மூத்தப்பிள்ளையோ முகங்கொடுத்துப் பேசுவதில்லை. இரண்டாவது பிள்ளை பிழைப்பது கடினம் என்று டாக்டர் சொல்லிவிட்டார். இதை ஒரு தாயுள்ளம் எப்படி தாங்க முடியும்?

அம்மா மனத் துயரங்களையெல்லாம் அடக்கிக் கொண்டு அண்ணாவைக் கவனித்தார்கள். இடைவிடாது அவர் அருகிலேயே இருந்து வேண்டியது செய்தார்கள். மூன்றாம் நாள் காலை அம்மா வுக்குக் காலரா நோய் வந்துவிட்டது. டாக்டர் வந்து பார்த்தார். ஏற்கெனவே மிகவும் பலஹlனமான உடல்.பிழைப்பது கஷ்டம்’ என்று சொல்லி விட்டார். நான் பெருந் துயரத்திலாழ்ந்தேன். அறைக்குள் படுத்திருந்த சின்னண்ணாவை வெளியே கூடத்தில் படுக்க வைத்துவிட்டு, அம்மாவை அறைக்குள் படுக்கவைத்தேன்.