பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232


பரிவு காட்டிய பால்ய நண்பர்கள்

இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களுக்கு இரு நண்பர்கள் உதவி புரிந்தார்கள்.ஒருவர் கிட்டுராஜூ, மற்றவர் வீரமணி ஐயர். இவ்விருவரும் 1924ஆம் ஆண்டு முதல் எங்களோடு நெருங்கிப் பழகியவர்கள். பெரும் செல்வந்தர்களாகப் பிறக்கவில்லையென்றா லும் நல்ல மனம் உடையவர்கள்.இவ்விரு நண்பர்களும் அடிக்கடி வந்து சந்தித்தார்கள்;ஆதரவு கூறினார்கள். பொருள் கொடுத்தும் உதவினார்கள். கையில் பொருளின்றிக் கடன் கேட்க மனமின்றி, விடுபட வழியுமின்றி, நாங்கள் வேதனைக்கடலுள் ஆழ்ந்து கிடந்த போது, பாசத்தோடு பரிவு காட்டிய கண்பர் கிட்டுராஜுவை உயி ருள்ள வரை மறக்க முடியாது. பல நாடக ரசிகர்களால் எங் களுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களும் நகை களும் இருந்தன. எட்டையபுரம் ஜமீந்தார் காசி விஸ்வநாத பாண்டியன் அன்புடன் வழங்கிய வைர மோதிரங்கள், கடுக் கன்கள், கெம்பு அட்டிகை முதலிய விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் இந்த நேரத்தில் கம்பெனிக்கு உயிர் கொடுத்தன.

எங்கள் நிருவாகம்

அம்மாவின் மரணத்திற்குப் பின் சிற்றப்பாவுக்கும், பெரியண்ணாவுக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டது. எதிலும் பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட சிற்றப்பா, இனித் தாம் கம்பெனியில் உரிமையாளராக இருக்க இயலாதென்று கூறி விட்டார். பெரியண்ணாவும் இதையே எதிர்பார்த்திருந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்கள் சார்பில் நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கம்பெனி நேரடியாக எங்கள் நிருவாகத் தில் வந்தது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்கு நாகர்கோவிலில் திருமணம் நடை பெற்றது. அம்மா இறந்த சமயம் என். எஸ். கிருஷ்ணன் நாகர் கோவிலில் இருந்தார். திருமண சம்பந்தமாக அவருக்கு பண உதவிசுட நண்பர் கிட்டுராஜுவே செய்தார். கொடுங் காலரா நோய் அம்மாவைக் கொள்ளை கொண்டபின் வேறு யாரையும் துன்புறுத்தவில்லை. சின்னண்ணா மறுபிறவிஎடுத்தது போல் படிப் படியாகக் குணம் அடைந்தார். திருமணத்தால் பெரியண்ணா