பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

தாமே வைத்துக் கொண்டு பணம் கொடுத்தார். அவற்றின் கெடு தீர்ந்ததும் ஏலத்தில் போய்விட்டதாகப் பொய்யுரைத்தார். அவருடைய துரோகச் செயல்களேத் தெரிந்திருந்தும் விடுபட வழியின்றி அவஸ்தைப்பட்டோம். சிற்றப்பா நிர்வாகத்தை விட்டதோடு காமேஸ்வர ஐயரையும் கம்பெனியிலிருந்து விலக்கினோம், அவருக்கு ஒரு பெருந்தொகை சம்பளப் பாக்கியாகக் கொடுபட வேண்டியிருந்தது. அதைச் சில மாதங்களில் கொடுத்துவிடுவதாகப் பெரியண்ணா எழுதிக் கொடுத்தார். எப்படியாவது மானேஜர் போனால் போதுமென்றிருந்தது.

காட்சி அமைப்பாளர்கள்

இச்சமயம் காட்சியமைப்பாளர்களில் முதல்வராயிருந்த பகவதியாபிள்ளை இரண்டு திரைகளை யாருக்கோ விற்றுவிட்டார். மற்றொருவரும் இதற்கு உடந்தையாக இருந்தார் என்று தெரிந்தது. என்ன செய்வது? நிருவாகத்தில் குழப்பம். நாடகம் நடைபெறாத நிலைமை. எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களை இவ்வாறு செய்யத் தூண்டியிருக்க வேண்டும்! பகவதியாபிள்ளை ஆரம்பகாலத்தில் எங்களிடம் உண்மையாக உழைத்த ஊழியர்களில் ஒருவர். காகிதத்தில் செடி, கொடி, பூ இவற்றைச்செய்வதில் நிபுணர். அவர் இவ்வாறு நடந்து கொண்டது எங்களுக்கெல்லாம் வேதனை அளித்தது. மேலும் மேலும், நாடக அரங்கில் பல பொருட்கள் களவாடப்பட்டு வந்தன. கடைசியாக வேறுவழி யின்றிப் பகவதியாபிள்ளையை விலக்க நேர்ந்தது. கும்பகோணத்திலிருந்து வேறு ஊருக்குப்போக முடிவு செய்தோம். புது ஊர்கள் எதிலும் கொட்டகை கிடைக்கவில்லை. பெரியண்ணாவும் கோபால் பிள்ளையும் பல ஊர்களுக்குப் போய்த் திரும்பினார்கள். கடைசியில் தஞ்சாவூருக்குப்போக முடிவு செய்யப் பெற்றது.

மோகனசுந்தரம்

தஞ்சையில் வாத்தியார் கந்தசாமி முதலியார் மீண்டும் கம்பெனிக்கு வந்துசேர்ந்தார். மோகனசுந்தரம் நாடகம் தயாராயிற்று. மோகனசுந்தரம் ஒரு அருமையான நாடகம் ஜே. ஆர். ரங்கராஜுவின் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. முற்