பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

235

போக்குக் கருத்துக்கள் அமைந்த நாடகம். பின்னல்திரைப்படத்தில் எல்லோரும்கண்டு மகிழ்ந்திருக்கிருேமாதலால் இதைப்பற்றி விரிவாகக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இந்நாடகம் மிகச் சிறப்பாக அரங்கேறியது. கம்பெனியின் இந்தக் கஷ்டமான நிலையிலும் புதிய நாடகத்திற்குக் காட்சிகள் தயாராயின. சின்னண்ணா லீலாவதியாகவும், எம். கே. ராதா சுந்தர முதலியாராகவும் தோன்றி நடிக்கும் காட்சிகள் மிக நன்முக இருக்கும். இந்நாடகத்தில் முக்கியபாத்திரமான விசாலாட்சியாக எம். ஆர். சந்திரன் என்ற இளைனார் நடித்தார். இவர் மிக அழகிய தோற்றம் உடையவர். ஒப்பனை ஒன்றும் இல்லாமல் சாதாரண நிலையிலேயே பாவாடை, தாவணி கட்டிவிட்டால் பகலில் கூட. இவரைப் பெண்ணென்றே எல்லோரும் நினைப்பார்கள். தலைமுடி யும் நன்றாக வளர்ந்திருந்ததால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். இவரிடம் ஒரு சிறிய குறைபாடு இருந்தது. எப்போதும் தொண்டை ‘கரகர’ என்று இரு குரல்களிலேயே பேசும். ஒப்பனை முடிந்த பின் இவரைத் தொடர்ந்து ஐம்பது தோப்புக் கரணங்கள் போடச் சொல்வோம். கொஞ்சம் மூச்சு வாங்கினால் தொண்டையிலுள்ள அந்தக் கரகரப்பு போய்விடும். பிறகு சாரீரம் இனிமையாக இருக்கும். இவர் மிக நன்றாக நடிக்கக் கூடியவர். மோகனசுந்தரத்திற்கு சுமாராக வசூலாயிற்று.