பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மும்மொழி நாடகம்

திண்டுக்கல்லில் இருந்தபோது என். எஸ். கிருஷ்ணன் ஜெகன்னதய்யர் கம்பெனியில் பிரபலமாய் விளங்கிய பக்த ராமதாஸ், நாடகத்தை நடத்த விரும்பினார். அதற்கான பொறுப்புக்களை அவரே ஏற்றுக் கொண்டார். நாடக ஆசிரியர், புதுக்கோட்டை தம்புடு பாகவதர் வந்தார். இவர் ஏற்கனவே துருவன் நாடகத்தை எங்களுக்குப் பயிற்றுவித்தவர். அதன் பிறகு சிவ கங்கையிலிருந்த போது ராமதாஸ் நாடகத்தையும் பாடம் கொடுத்திருந்தார். எனவே அதனைத் தயாரிக்க இப்போது அதிக சிரமம் எடுத்துக் கொள்ளவில்லை. நாடகம் தயாராயிற்று. ஆனால் நாடகத்துக்குத் தேவையான காட்சிகள், உடைகள் முதலியவற்றைச் செய்ய வேண்டுமே; எங்களுக்கிருந்த பொருளாதார நெருக் கடியில் எதுவும் செய்ய இயலவில்லை. இருந்த சில காட்சிகளை வைத்துக் கொண்டே நாடகத்தை நடத்த முனைந்தோம். ராமதாசரை அடைத்து வைக்கும் சிறைச்சாலை ஒன்று மட்டும் தேவைப்பட்டது. அப்போது ஓவியர் யாரும் இல்லை. சிறைச் சாலைக் காட்சியை என். எஸ். கிருஷ்ணனே ஒரே நாளில் எழுதி முடித்தார். நவாவுக்கு நல்ல உடைகள் இல்லை. முழுதும் ஜரிகையாலான துணி வேண்டுமென்று எல்லோரும் சொன்னோம். காட்சியமைப்பாளர்களில் ஒருவரான மாதவன் அதற்கும் ஏற்பாடு செய்தார். ஜரிகைபோல் தோன்றும் பவுன் வண்ணமுள்ள பெரிய ரேக் காகிதங்களை வாங்கி, அதிலேயே உடைகள் தயாரிக்கப் பட்டன. காகிதம் நீடித்து இராதென்றாலும் கண்ணாக்கு அழகாகவே இருந்தது. ராமதாஸ் தமிழ், தெலுங்கு, இந்துஸ்தானி ஆகிய மும்மொழிகளில் அமைந்த நாடகம். நான் ராமதாசராகவும் பெரியண்ணா டி. கே. சங்கரன் நவாப் தானிஷாவாகவும் நடித்தோம். என். எஸ். கிருஷ்ணன் மாறுபட்ட பத்து வேடங்களில் தோன்றி மிக அற்புதமாக நடித்தார். நாடகம் சிறப்பாக