பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254


அந்த நாடகம் எங்களுக்கு நிரம்பவும் பிடித்தது. ராதா ராஜ சேகரனக நடிப்பதென்று முடிவாயிற்று. உடனே பாடம் எழுதத் தொடங்கினோம். ஆனால், பதிபக்தி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஆர்வத்தோடு ஏற்பாடுகளைச்செய்த ராதா, பதிபக்தி அரங்கேறுவதற்கு முன்பே கம்பெனியை விட்டுச் சொல்லாமல் போய் விட்டார். அவர் போய்விட்டதை அறிந்த என். எஸ். கிருஷ்ணன் “அடப்பாவி, நான்தான் ராதாவைக் கம்பெனியில் சேர்த்தேன்; என்னிடம்கூடச் சொல்லாமல் போய்விட்டானே!” என்று வருந்தினார். பிறகு ராதா போடவேண்டிய சந்தானம் வேடத்தை என். எஸ். கிருஷ்ணனே போட்டார். சுவாமி நாடகங்களில் ராதாவுக்குப் பொருத்தமான வேடங்கள் ஒன்றும் இல்லாதபடியால் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. இருந்த வரை எங்களோடு அன்புடன் பழகினார். நல்ல முறையில் நடந்துகொண் டார். பெரியண்ணாவிடத்தில் அவருக்கு மிக்க மதிப்பு ஏற்பட்டிருந்தது. ராதா வரும்போது அவரைப்பற்றி முன்னாலேயே கேள்விப்பட்டிருந்த எங்களுக்கு அவர் எப்படியிருப்பாரோ வென்று யோசனையாகத்தான் இருந்தது. வந்து சிலகாலம் இருந்து போன பிறகு அவரது நட்புறவு எங்களை மிகவும் வருத்தியது. பட்டுக்கோட்டை, மன்னார்குடி, முதலிய ஊர்களில் நடித்துவிட்டு நாகப்பட்டினம் சென்றோம்.

கோல்டன் கோவிந்தசாமி நாயுடு

வசூல் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. எல்லோரும் சேர்ந்து கம்பெனியை இழுத்து நிறுத்த முயன்றோம். இயலவில்லை. சாண் ஏறினல் முழம் சறுக்கியது. பணம் என்னும் கயிறு இருந்தால்தான் கம்பெனியைக் கட்டி இழுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பொருள் வலிமை யுடைய ஒருவரிடம் கம்பெனியை ஒப்படைத்து நடிகர்களாகவே ஊதியம் பெற்றுக் கம்பெனியின் பெயர் மறையாதபடியாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என எங்களுக்குத் தோன்றியது. சென்னை கோவிந்தசாமி நாயுடு, கோல்டன் கம்பெனி என்னும் ஒரு பெரிய நாடகக் குழுவை வைத்துச் சிறப்பாக நடத்தியவர். அவர் எங்கள் நாடகக் குழுவை வருஷ ஒப்பந்தம் பேசி, எடுத்து நடத்த முன்வந்தார். சுந்தரராவ் இப்படி நிரந்தரமாகக்