பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

257


களையும்,தொழிலாளர்களையும் தமது வசப்படுத்திக் கொள்ள முற்பட்டார். உடுமலைப்பேட்டை வசூல் திருப்திகரமாக இல்லை. திருப்பூருக்குச் சென்றோம். அங்கும் வசூல் இல்லை. ஸ்பெஷலாகச் சில பெரிய நடிகர்களைப் போட்டு நடத்தினால் வசூலாகுமென்று நாயுடு எண்ணினார். நாங்கள் அவருடைய விருப்பத்துக்குச் சம்மதித்தோம்.

பி. எஸ். வேலுநாயர்

பிரசித்தி பெற்ற நடிகர் பி. எஸ். வேலுநாயரைக் கொண்டு சத்தியவான் சாவித்திரி, கோவலன் ஆகிய இரு நாடகங்கள் நடத்த ஏற்பாடாயிற்று. முதல் நாடகம் சத்தியவான் சாவித்திரி நடந்தது. பி. எஸ். வேலுநாயர் முற்பகுதியில் சத்தியவானாகவும் பிற்பகுதியில் எமதருமனுகவும் நடித்தார். சாரதாம்பாள் அம்மையார் சாவித்திரியாக நடித்தார். மற்ற எல்லா வேடங்களையும் எங்கள் நடிகர்களே ஏற்று நடித்தார்கள். நான் நாரதராக நடித்தேன். நாடகம் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் இருக்கும்போதுதான் நாயர் அரங்கிற்குள் வந்தார். எல்லோரையும் அழைத்தார். “உங்கள் அனைவருக்கும் சுவாமிகளின் பாடம் தானே?” என்று கேட்டார். எல்லோரும் ‘ஆமாம்’ என்று தலை யசைத்தோம். நாயர் மகிழ்ச்சியோடு “அப்படியானால் கவலை யில்லை” என்றார்.

நாயரின் நாவன்மை

எங்கள் தந்தையார் வேலுநாயரோடு பெண்வேடம் தாங்கி நடித்தவர். தாயரின் பேச்சுத் திறமையைப் பற்றி அவரிடம் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். மிகுந்த வாதத் திறமையோடு பேசக்கூடிய சிறந்த பேச்சாளரென அவரை எல்லோரும் புகழ்வார்கள். கே. எஸ். அனந்த நாராயண ஐயரும், கோல்டன் சாரதாம்பாளும்தான் நாயருடைய பேச்சுக்கு ஒருவாறு ஈடு. கொடுக்கக்கூடியவர்கள் என்று நண்பர்கள் பேசிக்கொண்டார்கள். அவர் என்ன பேசுவாரோ வழக்கமான பாடத்தை விட்டு வேறு எதையாவது பேசினால் என்ன செய்வது? என்ற அச்சம் எங்கள் எல்லோருடைய உள்ளங்களிலும் குடி கொண்டிருந்தது. நாயர் சத்தியவானக நடித்த முதல் பகுதியில் சுமாலியாக நடித்த