பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

263


முடியாது. என். எஸ். கிருஷ்ணன் தினைப்புனக் காவலராகத் தோன்றிப் பாகவதரைத் திணற அடித்தார்.

பாகவதர் நடித்த வள்ளித்திருமணம் நாடகத்திற்கு நல்ல வசூலாயிற்று. மீண்டும் பழைய நிலைதான். மகாபாரதத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த சாரதாம்பாள் வேறு சில நாடகங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இராமாயணத்தில் மாயா சூர்ப்பனகையாக நடித்தார். ராமராக நடிக்க, ராமர் நடிப்பில் பிரசித்தி பெற்ற பரசுராமபிள்ளை வந்திருந்தார். அவர் கோல்டன் கம்பெனியில் ஏற்கனவே நடித்தவர். சீனிவாச பிள்ளையைப் போலவே அவரும் சொந்தமாகக் கம்பெனி வைத்து நடத்திப் புகழ் பெற்றவர்; நன்றாக முறுக்கிய மீசையோடு அவர் ராமராக வந்தார்; அற்புதமாக நடித்தார்; அருமையாகப் பாடினார். நான் லட்சுமணனாக நடித்தேன். லட்சுமணன், ராமனுக்கு முடிசூட்டுவதைத் தடுத்த அனைவரையும் அழித்தொழித்து விடுவதாக ஆர்ப்பாட்டம் செய்து விட்டு உள்ளே போகும்போது ராமர் வருகிறார். வரும்போதே “ஆறுதல் சினமே” என்ற பாட்டு. இந்தப் பாட்டை உள்ளிருந்தபடியே இரண்டு மூன்று முறைகள் பாடிக் கொண்டிருந்தார் பரசுராமபிள்ளை. அவர் பின்னால் நின்றுகொண்டிருந்த கோவிந்தசாமி நாயுடுவுக்கு இது பிடிக்கவில்லை. “வெளியே போய்த்தான் பாடுமேய்யா” என்று பரசுராமபிள்ளையை முதுகில் கை வைத்துத் திடீரென்று தள்ளிவிட்டார். அவர் தள்ளப்பட்ட நிலையில் தடுமாறிக்கொண்டு வந்து நின்றதும் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.

சாரதாம்பாளின் கிண்டல்

அன்று எனக்குத் தொண்டை மிகவும் கம்மியிருந்தது. சரியாகப் பேச முடியவில்லை. சக்தியை முழுவதும் உபயோகப்படுத்திப் பேசினேன். பேசவே முடியவில்லையென்றால் பாட்டு எப்படி யிருக்கும்?... ஒரே அலறலாக இருந்தது. சூர்ப்பனகையின் காதலை ராமர் புறக்கணித்து விட்டுப் போனபின் அவள் லட்சுமணனோடு வாதாடுகிறாள். சூர்ப்பனகைக்கும், லட்சுமணனுக்கும் வாதம் நடந்தது. நான் பேச முடியாமல் திணறுவதைக் கண்டு சாரதாம்பாள் அம்மையாருக்கு ஒரே சிரிப்பு. என் தொண்டையிலிருந்து