பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264


நாலைந்து குரல்கள் வெளி வந்தன. இந்த லட்சணத்தில் நான் பாடத் தொடங்கினேன்.

"வேண்டாதே எனைத்
தீண்டாதே மொழி
தாண்டாதே தூர நில்...”

என்னும் பாடலை நான் மிகவும் சிரமப்பட்டுப் பாடி முடித்தேன். உடனே சாரதாம்பாள்,

“ஐயா, நீர் என்னைக் கொல்லுவதற்குள் உம்முடைய உயிர் போய்விடும் போலிருக்கிறதே! வேண்டாமையா வேண்டாம். நீர் என்னை விரும்பாவிட்டால் போகிறது. உம்முடைய நிலையைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. கொஞ்சம் அமைதியாக இரும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். சபையோரும் நிலைமையை உணர்ந்து கைதட்டிச் சிரித்தார்கள்.

சொந்தச் சமையல்

பொன்னமராவதியிலிருந்து கீழச்வசேற்பட்டிக்குப் போனோம். கம்பெனி வீட்டில் எல்லாரோடும் இருப்பது பெரியண்ணாவுக்கு வசதிக் குறைவாகத் தோன்றியது. அவருடைய விருப்பப்படி வேறு தனி வீட்டில் வசித்து வந்தோம். ஒட்டல் சாப்பாடு பிடிக்காததால் நாங்களே சமைத்து உண்டோம். பெரியண்ணா கறிகாய்களை எப்படிப் பாகம் செய்ய வேண்டும் என்பதை விளக்கிச் சொல்லுவார். அவரே கறிகாய்களை அரிந்தும் கொடுப்பார். மசாலை அரைக்க வேண்டிய வேலை என் பொறுப்பு. சின்னண்ணா அடுப்படியிலிருந்து எல்லாவற்றையும் ஆக்கித் தருவார். நாங்களே சமைத்து உண்டது மிகவும் சுவையாகத்தான் இருந்தது. அடிக்கடி கம்பெனியில் எங்களிடம் பாசமும் பரிவுமுடைய பிள்ளைகள் வந்து அனுதாபத்தோடு உதவி புரிவார்கள்.

கீழச்சேவற்பட்டியில் வசூல் இல்லை. மேலும் சில ஊர்களுக்குச் சென்றோம். அங்கும் இதே நிலைமை. கடைசியாக கரூருக்கு வந்தோம். கோவிந்தசாமி நாயுடுவின் மகள் கிருஷ்ணவேணியும் சில நாடகங்களில் எங்களோடு நடித்து வந்தார். ராமாயணத்தில் சீதையாக நடிப்பார். சந்திரகாந்தாவில் சந்திரவதனுவாக நடிப்பார். கரூரில் சந்திரகாத்தா நாடகத்தில் ஒருசுவையான நிகழ்ச்சி