பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272


“இந்தப் பசு என்ன விலை?” என்று கேட்டார். பால்காரர். ஏதோ ஒரு விலையைச் சொன்னார். “சரி, இந்தப் பசுவை எனக்குக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார் பிள்ளை. பால்காரரும் சம்மதித்தார். தர்மராஜபிள்ளை வாங்கிக் கொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. இரண்டு மூன்று தினங்களில் பணம் கொடுத்து விடுவதாக முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு தர்மராஜபிள்ளை அடிக்கடி தஞ்சைக்குப் போய் வந்து கொண்டிருந்தார். ஆனால் பணம் கொண்டு வரவும் இல்லை; பசுவையும் வாங்கவில்லை. பால்காரர் வழக்கப்படி பால் கொடுத்து வந்தார். பணத்தை ஏப்பமிட்டார்

சுமார் இருபது நாடகங்களுக்குப் பின் பால்காரர் வந்து, மானேஜரிடம் பால் கொடுத்ததற்குப் பணம் கேட்டார். அந்தச் சமயம் கம்பெனி வீட்டிலிருந்த தர்மராஜபிள்ளை,

“எவ்வளவு பணம்?” என்று கேட்டார். பால்காரர் தமக்குச் சேர வேண்டிய தொகையைச் சொன்னார்.

“அடேயப்பா, அவ்வளவு தொகையா? பசுதான் என்னுடையதாச்சேப்பா!... பாலைக் கணக்குப் பண்ணாதே. நீ இத்தனை நாட்கள் பகவுக்குப் போட்ட தீவனத்திற்குரிய தொகையை மட்டும் வாங்கிக் கொள்” என்றார்.

இந்த வார்த்தையைக் கேட்டதும் பால்காரர் மட்டுமல்ல; நாங்களும் பிரமித்து விட்டோம். பசுவை வாங்கிக் கொள்வதாக வாயால் பேசியதைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. அதற்காக முன் பணமும் கொடுக்கவில்லை. இந்த நிலைமையில் பசு தம்முடையது என்று உரிமை கொண்டாடத் தர்மராஜபிள்ளை துணிந்து விட்டாரென்றால் அவருடைய சுபாவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இந்தச் சம்பவம் எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. பால்காரருக்கும் பிள்ளைக்கும் நீண்ட நேர வாதம் நடந்தது. இறுதியாகப் பால்காரர், பிள்ளையைக்கண்டபடி ஏசிவிட்டுப் போய்ச் சேர்ந்தார்.

மீண்டும் ஊர் திரும்பினோம்

வசூல் இல்லாமல் சாப்பாட்டு நிருவாகம் தத்தளித்தது. என்ன செய்வதென்று தோன்றவில்லை.