பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

281


நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஈரோட்டில் இருந்து கொண்டே பவானி, கொமாரபாளையம், கோபிச் செட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் ஸ்பெஷலாகப் பம்பாய் மெயில்,பதிபக்தி நாடகங்கள் போட்டு வந்தோம். பாவலரின் இவ்விரு நாடகங்களும் கம்பெனி யின் முதன்மையான நாடகங்களாக விளங்கின.

பாலகிருஷ்ண சாஸ்திரி கம்பெனியில், வேலூரில் எங்களுக்கு அறிமுகமான ஏ. டி. தர்மராஜூ ஈரோட்டில் வந்து சேர்ந்தார். நீண்டகாலமாகப் பெரியண்ணா பார்த்து வந்த கணக்கு வேலை இவரிடம் ஒப்படைக்கப் பெற்றது. இவர் நல்ல நிருவாகத் திறமையும் நாணயமும் உடையவர். 1970 வரை இவரே கம்பெனியின் நிருவாகப் பொறுப்பையும் குடும்ப சம்பந்தமான இதர வேலைகளையும் கவனித்து வந்தார். சாஸ்திரியாரின் கம்பெனி கலைந்துபோனதால் மற்றுஞ் சில நடிகர்கள் வந்து சேர்ந்தார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் டி. எம் தியாகராஜன், டி. எ. காசிகாதன், டி. எஸ். தட்சணுமூர்த்தி, இன்று தேவி நாடக சபையின் அதிபராக இருக்கும் கே. என்.ரத்தினம் முதலியோர்.

ஜீவாவின் பாட்டு

1981 ஆம் ஆண்டு முதலே பத்திரிக்கைகளைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். தோழர் ஜீவானந்தம் அவர்களோடு நட்புறவு ஏற்பட்டபின் இந்த ஆர்வம் பன்மடங்காக வளர்ந்தது. ஒய்வு நேரங்களில் எப்போதும் தனியேயிருந்து படித்துக் கொண்டேயிருப்பேன்.

நாங்கள் போகும் ஊர்களுக்கெல்லாம் ஜீவா கூட்டங்களுக்காக அடிக்கடி வருவார். பெரும்பாலும் எங்கள் கூடவே தங்கு வார். நாடகங்களைப் பற்றி உரையாடுவார். அவரோடு பேசிக் கொண்டிருப்பதே எங்களுக்குப் பெரும் உற்சாகமாக இருக்கும். பம்பாய் மெயில் நாடகத்தில் நான் பாடுவதற்கென்றே ஒரு விருத்தம் எழுதிக் கொடுத்தார். அப்பர் பெருமானின் தேவாரப் பாடலைச் சிறிது மாற்றி எழுதியிருக்கிறேன் என்று சொன்னதாக நினைவு. அதை நான் கேதார கெளளராகத்தில் வீராவேசத்தோடு