பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

283


பிட்டு வந்தேன். நடிகர்கள் அறிவு வளர்ச்சி பெறவும், பொது விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் கட்டுரை, கதையெழுதி பழகவும் நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில நடிகர்களும் தொழிலாளர்களும் இதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் தொல்லை கொடுத்தார்கள்.

ஆத்தூர், விருத்தாசலம், பண்ணாருட்டி ஆகிய மூன்று ஊர்களிலுமாக மொத்தம் பத்து இதழ்கள் வெளிவந்தன. தம்முடைய குற்றம் குறைகளைப் பத்திரிக்கையில் எழுதுவதைச் சிலர் விரும்பவில்லை. இதனால் அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டன. கடைசியாகப் பெரியண்ணா ஒருநாள் என்னிடம்,

“‘உன்னுடைய பத்திரிகையால் வீணாகச் சண்டை ஏற்பாடுகிறது. நீ செய்வது பயனில்லாத வேலை!” என்றார். வேறு வழியின்றிப் பத்தாவது இதழோடு அறிவுச்சுடர் நிறுத்தப்பட்டது.

சிறுவந்தாடு மாநாடு

பண்ணாருட்டியில் வசூல் இல்லை. இராமாயணம், பம்பாய். மெயில் இரு நாடகங்களுக்கு மட்டும் சுமாராக வசூலாயிற்று. பண்ணாருட்டிக்கு அருகில் பத்தாவது மைலில் சிருவந்தாடு என்னும் சிற்றுார் இருக்கிறது; மகாத்மா காந்தியடிகள் காங்கிரஸ் மாநாடுகள் நகரங்களை விட்டுச் சிற்றுார்களில் நடைபெற வேண்டுமென ஆணையிட்டிருந்தார். அதற்கிணங்கத் தமிழ் மாகாண மாநாடு முதன்முதலாகச் சிறுவந்தாடு கிராமத்தில் நடந்தது. எங்களில் சிலர் காங்கிரசில் தீவிரப் பற்றுக் கொண்டிருந்தால் சிறுவந்தாடு மாநாட்டில் கலந்து கொள்ள முடிவு செய்தோம். மாநாட்டுக்கு முதல் நாள் இராமாயணம் வைக்கப் பட்டிருந்தது. நாடகம் விடிய ஆறுமணிவரை நடந்தது. நாடகம் முடிந்ததும் நானும், தம்பி பகவதியும் மற்றும் சிலரும் குறுக்கு வழியில் கால்நடையாகவே புறப்பட்டுச் சிறுவந்தாடு சேர்ந்தோம். மாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. எங்களுக்கு அறிமுகமான நண்பர்கள் பலர் மாநாட்டுக்கு வந்திருந்தால் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நான் பாரதி பாடல்களைப் பாடினேன். அன்று மாலையே பண்ணாருட்டிக்குத் திரும்பினோம்.