பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

309



“ஏண்டா! உன்னைக் கட்டிக்கப்படாது?” என்றார் ராஜா. கலைவாணர் மேலும் அமைதியாக, “நான் பதிவிரதன்” என்றார்.

“பதிவிரதனா?... அதென்னடா, புதுசாயிருக்கு?” இது ராஜாவின் கேள்வி.

“புதுசு ஒண்ணாமில்லையே! பொம்பளையிலே பதி விரதையில்லே? அது மாதிரி ஆம்பிளேயிலே நான் பதிவிரதன். என் மனைவி நாகம் மாளைத் தவிர வேறே எந்தப் பொம்பளையும் என்னைத் தொட அனுமதிக்க மாட்டேன். நான் ஏக பத்தினி விரதன்” என்றார் கலைவாணர்.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இப்படிச்சொன்னதும் டைரக்டர் ராஜா திடுக்கிட்டார். ஏதோ காரணத்தோடுதான் கிருஷ்ணன் இவ்வாறு பேசுகிறார் என்பது ராஜாவுக்குப் புரிந்து விட்டது. உடனே அவர் எஸ். கே. மொய்தீனை நோக்கி, என்ன எஸ். கே. ஒங்க கிருஷ்ணன் தகராறு பண்றானே? தொட்டு ஆக்டு பண்ணாதே போன படம் நல்லாயிருக்குமோ?”... என்று கேட்டார். விஷயம் இவ்வளவு தூரத்திற்கு வந்ததும் எஸ். கே மொய் தீனுக்கும் பேசத் துணிவு வந்துவிட்டது. அவர் அதுவரையில் பொருமிக்கொண்டிருந்த தம் உணர்ச்சிகளையெல்லாம் வார்த்தைகளாகக் கொட்டத் தொடங்கினார்.

“பின்னே என்னுங்க, இந்த சீன நீங்க இப்படியா எடுக்கிறது? கிருஷ்ணனும் ஷண்முகமும் நாடகத்திலே எப்படி அற்புதமா நடிப்பாங்க; பொம்பளையாச்சே நாடகத்தை விட நல்லா அமையும் சினிமாவிலேண்ணா நாங்க சந்தோஷமா யிருந்தோம். நீங்க ஆரம்பத்திலேயிருந்தே சாமாவும் கமலமும் தொடாமலே எடுத்து முடிச்சிட்டீங்களே? பின்னே கிருஷ்ணனுக்கு வருத்தம் வராதுங்களா? நீங்க கேட்டதையே திரும்பிக் கேக்கிறேன். அந்த அம்மா கிருஷ்ணனைத் தொட்டு ஆக்டு பண்ணாத போனா படம் நல்லாயிருக்குங்களா? நீங்க முன்னாடி தாசி கமலத்தைத் தொட கிருஷ்ணனை அனுமதிக்கவேயில்லை... அதனாலேதான் இப்போ கிருஷ்ணன் தொட்றதுக்குத் தகராறு பண்றாரு ! என்று மேலும் படபடப்போடு பேசிக்கொண்டே போனார். அப்போதுதான் ராஜா தம் தவறை உணர்ந்தார். தாசி கமலமாக நடித்த