பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கம்பெனி நிறுத்தம்

நவம்பர் 11ஆம் நர்ள் எல்லோரும் ஈரோட்டுக்குத் திரும்பினோம். மேனகா படத்திற்காக எங்களுக்கு மொத்த வருவாய் பதினாலாயிரம் ரூபாய்கள். அதில் நடிகர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் கொடுத்ததுபோக எங்கள் நால்வரின் உழைப்புக்கு எண்ணாயிரம் ரூபாய்கள் மிஞ்சியது. கம்பெனியைத் தொடர்ந்து நடத்தப் பெரியண்ணா விரும்பவில்லை. நாடகசாலை களெல்லாம் பேசும் படக்காட்சி சாலைகளாக மாறிக் கொண்டிருந்தன. வாடகை பன்மடங்கு உயர்ந்து விட்டது. நெடுங்காலம் நாடக எந்திரத்தில் சிக்கிக் கொண்டு சுழன்று வந்த எங்கள் வாழ்க்கையில், சினிமா உலகம் சிறிது சாந்தியை உண்டாக்கியது. இந்நிலையில் மீண்டும் தொல்லையில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது என்றே தோன்றியது. எங்கள் குடும்பத்திலும் சில அவசியமான காரியங்கள் நடைபெற வேண்டியிருந்தன. எல்லாவற்றையும் உத்தேசித்து 1935 நவம்பர் 11ஆம் தேதியோடு கம்பெனியைக கலைத்துவிட்டு நாகர்கோவிலுக்குப் போக திட்ட மிட்டார் பெரியண்ணா. நடிகர்கள் எங்களிடம் விடை பெற்றுக் கொண்டு பிரிந்தபோது, எங்கள் கண்கள் கலங்கின. மீண்டும் கம்பெனி துவக்குவோம் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாததால் துக்கம் தாங்க முடியவில்லை.

தேர்தல் பிரசாரம்

அந்தச் சமயத்தில் காங்கிரஸ், சட்ட சபையைக் கைப்பற்றும் முதல் தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெற்றது; ஈரோட்டுப் பகுதியில் பழைய கோட்டை பட்டக்காரர் திரு நல்லதம்பிசக்கரை மன்றாடியார் காங்கிரஸ் சார்பிலும், அவருக்குப் போட்டியாகக் குட்டப்பாளையம் திரு கே. எஸ். பெரியசாமிக் கவுண்டரும் நின்