பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மறு பிறப்பு

சுமார் ஆறுமாத கால ஓய்வுக்குப் பின்னார் புதிய உற்சாகத் தோடு கம்பெனியைத் துவக்கினோம். 1936 மே மாதம் 19ம் நாள் மீண்டும் ஈரோட்டிலேயே கம்பெனி புனார்ஜென்மம் எடுத்தது. எங்கள் குழுவிலிருந்த நடிகர்கள் பெரும்பாலோரும் வேறு கம்பெனிகளுக்குச் செல்ல மனமின்றி இருந்ததால் கம்பெனியை மீண்டும் தோற்றுவிப்பதுஎளிதாக இருந்தது. பழைய நடிகர்கள் பலரும் வந்து சேர்ந்தார்கள்.

எங்கள்மீது அன்புகொண்ட பெரியார் ஈ.வே. ரா. அவர்கள் விளம்பரச் சுவரொட்டிகளைத் தம் அச்சகத்தில் இலவசமாகவே அடித்துக் கொடுத்து உதவினார்.

டாக்டர் கிருஷ்ணசாமியின் நட்பு

இந்தச் சந்தர்ப்பத்தில் 1934 முதல் எங்களோடு நட்புரிமை பூண்ட டாக்டர் கிருஷ்ணசாமி எனக்குப் பெரிதும் உதவினார். 1929 முதலே வலது கையில் எனக்கு ஒரு வலி ஏற்பட்டிருந்தது. அந்த வலிக்கு ஊசி போட்டுக் கொள்வதற்காக நண்பர் ஈஸ்வரன் எனக்கு டாக்டரை அறிமுகப்படுத்தினார். அது முதல் டாக்டர் சிருஷ்ணசாமிக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. உடன் பிறந்த சகோதரரைப்போல் எண்ணி, டாக்டர் எனக்குச் சிகிச்சையளித்தார். மருந்துக் கூடப் பணம் பெறாமல் தாமே அனைத்தும் செய்தார். டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பொதுவுடமை வாதி. தோழர் ஜீவா, பி. இராமமூர்த்தி, பெரியார் ஈ வே. ரா. ஆகியோருடன் தொடர்புடையவர். மேனகா படத்திற்காக தாங்கள் பம்பாய்சென்றிருந்தபோது அவரும்பம்பாய்க்குவந்திருந் தார், நாங்கள் கம்பெனியை நிறுத்தியபோது மிகவும் வருந்திய