பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

323



எஸ். வி. சகஸ்ரநாமம் பாலாமணி படத்தின் கதாநாயகன் எஞ்சிட் சிங்காக நடித்தார். சாண்டோ வி. கே. ஆச்சாரி, பக்காத் திருடனாக நடித்தார். சின்னண்ணா கதை வசனம் எழுதும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மற்றவர்கள் எல்லோரும் பல பாத்திரங்களை ஏற்று நடித்தோம். என். எஸ். கிருஷ்ணனையும் இந்தப் படத்தில் நடிக்கச் செய்ய வேண்டுமென்று பெரியண்ணா வற்புறுத்தினார். படாதிபதிகள் அதன்படி என். எஸ். கே. யை யும் ஒப்பந்தம் செய்தார்கள். அவரும் எங்களோடு பாலாமணி யில் நடித்தார்.

பாவேந்தர் பாரதிதாசன்

பாலாமணிக்குப் பாடல்கள் எழுதத் தமிழகத்தின் தன்னிக ரில்லாத புரட்சிக்கவினார் பாரதிதாசனை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் ஈரோட்டுக்கு வந்து எங்களோடு தங்கினார். பாரதிதாசன் பாடல்களிலே உள்ளத்தைப் பறிகொடுத்தவன் நான். பாடல்கள் எழுத அவரை ஏற்பாடு செய்யும்படி நான்தான் படாதிபதிகளிடம் வற்புறுத்தினேன். கவிஞரோடு நெருங்கிப் பழகவும் உரையாடவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. உயர்ந்த மேதைகளோடு பழகுவதென்பது ஒரு அரியகலை. காலமறிந்து மென்மை யாகப் பழக வேண்டும். அவர்களைப் புரிந்து கொண்டு பழக வேண்டும். புரட்சிக் கவினார் அப்படிப் பழகி உறவாட வேண்டிய பெரிய மேதை என்பதை அந்நாளிலேயே நான் புரிந்து கொண்டேன். சின்னண்ணா டி. கே, முத்துசாமிதான் படத்தின் சங்கீத டைரக்டர். பாரதிதாசன் அவரோடு நல்ல முறையில் ஒத்துழைத்தார். பாலாமணிக்குரிய பாடல்கள் அனைத்தும் ஈரோட்டிலேயே எழுதப் பெற்றன.

திரைப்படங்களுக்குப்பாடல்கள் எழுதுவதிலே புரட்சிக்கவிஞருக்கு உற்சாகமில்லை. மற்றவர்கள் வற்புறுத்தலுக்காக ஏதோ எழுதினார். பாடல்கள் எழுத உட்காருவார், இரண்டு வரிகள் எழுதுவார். உடனே ஏதாவது இலக்கிய பேச்சு தொடங்கும். அதிலேயே மூழ்கிவிடுவார்.சுவையோடு பேசிக் கொண்டிருப்பார். பாடல்களைப் பற்றி யாராவது நினைவுபடுத்துவார்கள். “அது