பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330


 ‘தேசபக்தி’ நாடகத்தைப் பார்வையிட்டு ஆசி கூறும்படி தலைவர் காமராஜரையும், மட்டப்பாறை வெங்கட்ராமையரை யும் அழைத்திருந்தோம். 20. 11- 37ல் நடந்த தேசபக்தி நாடகத் ‘திற்குத் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மட்டப்பாறை வெங்கட்ராமையரும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இருவரும் நாடகத்தை மிகவும் பாராட்டினார்கள். அத்துடன் நற்சான்றுகளும் எழுதித் தந்து உதவினார்கள். அந்த நாளில் எங்களுக்கு வசூல் இல்லாது போனலும் இது போன்ற பாராட்டுக்களே மேன்மேலும் இத் துறையில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்து வந்தன.

18. 12. 37ல் பொதுவுடமைக் கட்சிப் பத்திரிக்கையான ஜனசக்திவார இதழுக்காக சந்திரகாந்தா நாடகம் நடிக்கப் பட்டது. அன்று தோழர் ஜீவானந்தம் தலைமை தாங்கிப் பாராட்டினார், அவரது கம்பீரமான ஊக்கம், உணர்ச்சி நிறைந்த பேச்சு மேலும் எங்களை உற்சாகப்படுத்தியது.

சின்னண்ணாவின் நாடகத் திறமை

எங்கள் நால்வரில் சின்னண்ணா டி. கே. முத்துசாமி அவர்களுக்கு நாடகம் புனையும் ஆற்றல் நன்கு அமைந்திருந்தது. அப்போது அன்னபூர்ணா மந்திரம் என்னும் மலையாள நாவல் ஒன்றை நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம். அது வங்காளியிலிருந்து மொழி பெயர்க்கப் பெற்ற கதை. அந்தக்கதையின் அமைப்பு எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தியிலிருந்து மொழி பெயர்த்ததாக மலையாள ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். எனவே நாங்கள் ‘அன்ன பூர்ணிகா மந்திர்’ என்னும் அதன் இந்திமொழி பெயர்ப்பை வரவழைத்துப் படித்தோம். நாகர்கோவிலில் ஒய்வாக இருந்த நாட்களில் நானும்சின்னண்ணாவும் ஒரளவு இந்தி படிக்கக் கற்றுக் கொண்டோம். மலையாளம், இந்தி ஆகிய இரு மொழி பெயர்ப்புகளின் துணையோடு அந்தக் கதையைத் தமிழ் நாடகமாக எழுதி முடித்தார் சின்னண்ணா. குமாஸ்தாவின் பெண் என்று அந்த நாடகத்திற்கு பெயரிட்டார்.

குமாஸ்தாவின் பெண்

எங்கள் நாடக வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய சிறப்பு உண்டு. ஒரு எழுத்தாளருடைய நாவலையோ, நாடகத்