பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

345


போதுமே பெரியண்ணாவிடம் இல்லையென்பதையும் நினைவு படுத்தி யிருந்தேன். அந்தக் கடிதத்திற்கு என்.எஸ் கே. யிடமிருந்து பதில் வரவே இல்லை. எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என்னைப் போலவே கே. ஆர். ராமசாமியும் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார், அதை என்னிடமும் காண்பித்தார். இந்த விபரங்களையெல்லாம் அறிந்ததும் பெரியண்ணா மிகவும் வருத்தப் பட்டார். இந்த நிலையில் அவரை அழைத்து மேனகாவில் நடிக்க வைக்கப் பெரியண்ணா விரும்பவில்லை. “தேவையற்ற ஆடம்பர மரியாதைகளையெல்லாம் நீண்ட காலம் பழகிய நம்மிடம் எதிர்பார்க்கும் கிருஷ்ணனை நாம் எப்படி அழைப்பது? அவருக்குத் தனி மரியாதை செய்யவோ, கெளரவிக்கவோ எனக்குத் தெரியாது” என்று கூறி விட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பின் என். எஸ். கே. யை நாடகத்திற்கு அழைக்கும் எண்ணத்தையே கைவிட நேர்ந்தது.

இலட்சிய வெற்றி

காரைக்குடியில் வசூல் நிலை மிகவும் மோசமாக இருந்த தென்று குறிப்பிட்டேனல்லவா? இதற்காக அடிக்கடி யாராவது ஒரு பிரமுகரைத் தலைமை தாங்கச் செய்தோம். ஒருநாள் ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்திற்குத் தோழர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். ஏறத்தாழ அரை மணிநேரம் நாடகக் கதையையும் அதனை நாங்கள் நடிக்கும் சிறப்பினையும் வியந்து பேசினார். பேச்சின் முடிவில்,

“இன்று இந்த அற்புதமான நாடகத்தைக் காண மிகக் குறைந்த எண்ணிக்கையான மக்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். காலம் மாறத்தான் போகிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான மக்கள் இதே நாடகத்தைக் கண்டு மகிழப் போகிறார்கள் என்பதை அறுதியிட்டுச் சொல்கிறேன்” என்று ஆவேசத்தோடு கூறினார். ஜீவாவின் இந்தத் தீர்க்கதரிசனம் 1940-ஆம் ஆண்டில் உண்மையாகவே நிறைவேறியது. ஆனால் அப்போது ஜீவா தலைமறைவாக இருந்தார், ஆம்; அவருடைய மகிழ்ச்சிக் கடிதம் எனக்கு மதுரையில் கிடைத்தது.

மற்றொரு நாள் காரைக்குடி நகரக் காங்கிரஸ் பிரமுகர் சா. கணேசன் குமாஸ்தாவின் பெண் நாடகம் பார்க்க