பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348


கொஞ்சந்தான் வளர்ந்திருந்தது. ஒப்பனையாளர் இராஜமாணிக்கம் அந்த முடியிலேயே கொண்டை ஊசி, கரல் பின் ஆகியவற்றின் துணையோடு பின்னிவிடப்பட்ட ஒரு சடையைத் தொங்கவிட் டிருந்தார். நான் இழுத்ததும் சிறுவன் சட்டென்று நிற்காமல் போக முயன்றதால் சடை கையோடு வந்தது. சபையில் ஒரே கரகோஷம். சடையைக் காதலனிடம் பறி கொடுத்துவிட்டு ஓடிய அந்தச் சிறுவன்தான் கலைஞர் ஏ.பி.நாகராஜன்.

மனத்தாங்கலின் உச்ச கட்டம்

காரைக்குடியில் பட்டாபிஷேகத் தேதி முன் கூட்டி அறிவிக்கப் பட்டது. அந்தத் தேதிக்கு மறுநாள் நாங்கள் நடிக்கும் அதே கொட்டகையில் “திரைப்பட நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடிக்கப் போகிறார்” என்ற விளம்பரத்தைப் பார்த்தோம் எனக்குத் திகைப்பாய் இருந்த்து. உடனடியாக என்.எஸ்.கேக்குக் கடிதம் எழுதினேன். “வசூல் இல்லாமல் நாங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தாங்கள் இவ்வாறு வந்து நடிப்பதும், அதை முன்கூட்டியே விளம்பரப் படுத்துவதும் போட்டி நாடகம் போல் கருதப்படுமல்லவா?” என்று குறிப்பிட்டிருந்தேன். என்.எஸ்கிருஷ்ணன் எனக்குப் பதில் எழுதியிருந்தார்.

“நம்முடைய கம்பெனி நாடகம் முதல் நாள் இருப்பது எனக்குத் தெரியாது. நான் நடிக்கும் நாடகம் ஒருவருக்கு உதவி யளிப்பதற்காக ஒப்புக் கொண்ட நாடகம். அதை இனி நிறுத்து வது சாத்தியமில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதில் எனக்குத் திருப்தி அளிக்க வில்லை. காரைக்குடி நகரில் பலமுறை என்.எஸ்.கே. எங்கள் குழுவில் பணி புரிந்திருக்கிறாராதலால் நகரத்தார் பலருக்கு எங்கள் தொடர்பு நன்றாகத் தெரியும். எனவே, அவர்களில் பலரும் என்.எஸ்.கே. இப்படிச் செய்வது தவறு என்று அபிப்பிராயப் பட்டார்கள்.

இந்த நிலையில் எங்கள் பட்டாபிஷேக நாடகம் முடிந்தது . மறுநாள் என்.எஸ்.கே. நடிக்கும் நாடகத்திற்காக நாடகாசிரியர்