பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

353

மந்திரி சுமந்திரர், தந்தைக்குச் சொல்ல வேண்டிய செய்தி ஏதேனும் உண்டா?’ என்று கேட்கும் நேரத்தில், அது யாரவன் எனக்குத் தந்தை?’ என்று கண்களில் கோபக் கனல் தெறிக்கக் கூறி, கம்பன் பாடியுள்ள மூன்று பாடல்களை ஆவேசத்தோடு முழக்கும் அவரது ஆற்றல் மிக்க நடிப்பு, அவையோரை மட்டு மல்ல; மேடையில் அவரோடு இராமராக நடிக்கும் என்னையும் மெய்சிலிர்க்க வைக்கும். சிவலீலாவில் சிவபெருமாகை நின்று பார்வதி, முருகன், நந்திதேவர் முதலியோருக்கு அவர் சாபம் கொடுக்கும் கட்டம், பார்த்து மகிழ வேண்டிய அருமையான காட்சி. அக் காட்சி நடைபெறும்போது நான் பக்கத்தட்டியில் மறைவில் நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன்.

சீனிவாச ஐயங்கார்

திருச்சியில் சிவலீலா நாடகம் நான்கு நாட்கள் நடந்தன. இவ்வளவு சிரமப்பட்டுத் தயாரித்த சிவiலாவுக்கும் வசூல் இல்லை. வழக்கம்போல் கே.டி. ருக்மணியை வரவழைத்து மனே கரா நாடகம் போட்டோம். சுமாராக வசூலாயிற்று. திண்டுக்கல் போக முடிவு செய்தோம். பணநெருக்கடி அதிகமாக இருந்தது. எதிர் பார்த்த நண்பர்களின் உதவி உரிய சமயத்தில் கிடைக்க வில்லை. இந்த நிலையிலும் மணவை ரெ. திருமலைசாமியின் நகரதுாத னுக்கும், எதிரொலி என்னும் இதழை நடத்தி வந்த நண்பர் கணபதிக்கும் திருச்சியில் உதவி நாடகங்கள் நடத்தி கொடுத் தோம். அவற்றிற்கு டிக்கட் தனியாக விற்பனை செய்ததால் ஒரளவு வசூல் ஆயிற்று. கணபதியின் எதிரொலிக்காக 9-12-39 இல் நடந்த தேசபக்தி நாடகத்திற்கு முன்னுள் காங்கிரஸ் மகா சபைத்தலைவர் எஸ். சீனிவாசஐயங்கார் தலைமை வகித்தார். அவர் ஆங்கிலந்தில்தான் பேசினார். என்றாலும், தமிழில் பேச இயலாத தம் நிலையை எடுத்துச்சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். “இந்த நடிகமணிகள் தேசபக்தி நாடகத்தில் பேசிய தமிழைப்போல் என்னுல் பேச முடிந்திருந்தால் சாதாரணத் தமிழ் மக்களிடையே யும் நான் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருப்பேன், நான் படித் துள்ள ஆங்கிலக் கல்வி, படித்த கூட்டத்தாரிடம் மட்டுமே என்னைத் தொடர்பு கொள்ள வைத்து விட்டது. அதற்காக மிகவும் வருந்துகிறேன்’ என்று கூறினார்.எ. நா—23