பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூலோகரம்பை

ஈ. வெ. ரா.பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலிருந்து விலகி, இப்போது பொதுவுடைமைப் புரட்சி வீரராக விளங்கினார் தோழர் ஜீவானந்தம். அவர்மூலம்பொதுவுடைமை வீரர்கள் சிலர் எங்களுக்கு அறிமுகமாயினார். இவர்களில் ஏ. கே கோபாலன், பி.இராமமூர்த்தி, கே. பாலதண்டாயுதம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பாலதண்டாயுதம் தம்பதி சமேதராகவே நாடகம் பார்க்க வருவார். எனக்கு அவர் அளித்த ஒரு சிறிய வெள்ளிப் பரிசினைக்கூட நான் இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறேன். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று வெளிப்படையாகவே எழுதித் தொங்கவிட்ட எங்கள் முகப்புத் திரை பல்வேறு அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் காரணமாக சர்க்கார் அதிகாரிகளின் தொல்லையும் அதிகரித்தது. பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் வெளியிடப் பெற்ற ‘ஜன சக்தி’ வார இதழுக்கு எங்கள் குழுவின் நடிகர் ராஜநாயகம் ஏஜண்டாகவே இருந்தார். சமுதாய நாடகங்களில் வாய்ப்பு நேரும் போதெல்லாம் சமதர்மக்கருத்துக்களைப் பிரசாரம் செய்து வந்தோம்.

பூலோகரம்பையில் ஒப்பந்தம்

திண்டுக்கல்லில் நாடகங்கள் நடத்தத் தொடக்கத்திலேயே அவசரமாகப் பணம் தேவைப்பட்டது. சின்னண்ணா துணைவியாரின் கழுத்திலிருந்த சில நகைகளைப் பாங்கில் அடகு வைத்துப்பணம் வாங்கினோம். காரியங்கள் நடந்தன. குமாஸ்தாவின் பெண் நாடகத்தைத் திரைப்படமாக்க வேண்டுமென்று சின்னண்ணா திட்டமிட்டார். அதற்காக எங்கள் குழுவிலிருந்த பழைய நடிக நண்பர் கே.வி. சீனிவாசனைக் கம்பெனிக்கு வரவரைத்தார்.