பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358


டி.எஸ்.துரைராஜ், டி.பாலசுப்பிரமணியம், டி. எஸ். பாலையா, பேபி ருக்மணி, பி.ஜி. வெங்கடேசன் முதலியோரும் நடித்தார்கள். பி, என்.ராவ், படத்தை டைரக்ட் செய்தார்.

தம்பியின் முதன்மை

திண்டுக்கல்லில் நான் இல்லாமலை நாடகங்கள்தொடர்ந்து நடைபெறுவதற்கு நடிகர்கள் வழிவகை செய்தார்கள். சிவலீலாவில் நான் புனேந்த விறகுவெட்டி, புலவர், சிவனடியார், எல்லாம் வல்ல சித்தர், வலைஞன் ஆகிய வேடங்களை நடிப்பதற்குத் தம்பி பகவதியே துணிவோடு முன்வந்தார். அதேபோல் குமாஸ்தாவின் பெண்ணிலும் நான் நடித்த ராமு வேடத்தைப் பகவதியே நெட்டுருப் போட்டார். ராமதாசில் இரண்டாவது ராமதாசாக நடிக்க கே. ஆர். ராமசாமி இசைவளித்தார். ஆக, ஷண்முகம் இல்லாமலே நாடகங்களைத் தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலைமையை உருவாக்க நடிகர்கள் அனைவரும் ஒத்துழைத்தார்கள். சம்பூர்ண இரமாயணம், மனோகரா முதலிய சில நாடகங்களுக்குத்தான் நான் தேவைப்பட்டது. திண்டுக்கல்லுக்கும் கோவைக்குமாக இரண்டு மூன்றுமுறை இவ்வாறு காரில் பயணம் செய்ய நேர்ந்தது. பெரியண்ணா என் உடல் நலத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். கோவைக்கு அருகிலேயே இருந்தால் இன்னும் கொஞ்சம் வசதியாக இருக்குமென்று எண்ணினார். பொள்ளாச்சி, திருப்பூர் இரு ஊர்களுக்கும் சென்றார். திருப்பூர் கொட்டகை உறுதிப்பட்டது. நான் எவ்விதக் கவலையுமின்றித் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தேன். குதிரையேற்றம் பழகினேன். சிறுவாணி, பேரூர் முதலிய இடங்களில் நானும் மகாலிங்கமும் குதிரை சவாரி செய்தோம். பாலையாவுக்கும் எனக்கும் சிறுவாணிக் காட்டில் பலத்த சண்டை நடந்தது. படப் பிடிப்பில் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தேன். திடீரென்று திருப்பூரிலிருந்து உடனே புறப்பட்டு வரும்படியாகப் பெரியண்ணா தொலைபேசி மூலம் அறிவித்தார். 15-3-40-ஆம் நாள் அதிகாலை காரில் புறப் பட்டுத் திருப்பூர் வந்தேன். தங்கை சுப்பம்மாளின் கணவருக்கு உடல் நலமில்லையென்றும் உடனே நாகர்கோவில்செல்ல வேண்டு மென்றும் கூறினார். சிறிதும் தாமதிக்காமல் திண்டுக்கல்வந்தோம். அன்றிரவு நடைபெற இருந்த நாடகம் நிறுத்தப்பட்டது. மாலை