பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குமாஸ்தாவின் பெண் படம்!


குமாஸ்தாவின் பெண் படப் பிடிப்பு 31-7.40இல் கோவை பிரிமியர் சினிட்டோனில் தொடங்கப் பெற்றது. மறு நாள் கோவை ராஜா தியேட்டரில் நாடகமும் ஆரம்பமாயிற்று. அடுத்து, குமாஸ்தாவின் பெண் நாடகத்தை, நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் தலைமையில் தொடங்கினோம்” நாடகத்தைப் பாராட்டிய அவர் படமும் வெற்றி பெற வேண்டு மென்று வாழ்த்தினார்.

எங்கள் குமாஸ்தாவின் பெண் படப் பிடிப்பைப் பற்றிச் சொல்வதென்றால் அது ஒரு மகாபாரதமாகும். கதை, சீனரியோ டைரக்ஷன்,நடிகர்கள், பின்னணி, இசை இவையெல்லாம்.எங்கள் பொறுப்பு. ஸ்டுடியோ நிருவாகம் மூர்த்தி பிலிம்ஸைச்சேர்ந்தது. பெண் நடிகையர் எம். வி. இராஜம்மா, டி. எஸ். இராஜலட்சுமி, சகுந்தலா, இரண்டொருவரைத் தவிர எம். எஸ். திரெளபதி உட்பட எங்கள் நடிகர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாதலால் ஒத்திகை முதலிய வகைகளில் தகராறு வராது; கோவையில் மூன்று மாத காலம் நாடகம் ஆடிக்கொண்டே படப்பிடிப்பையும் முடித்து விடலாம் என்பது எங்கள் திட்டம். ஆனால் நடந்தது வேறு. படப்பிடிப்பு நடந்த பிரிமியர்சினிடோன் ஸ்டுடியோவின் அன்றைய நிலை நைந்து போன பழைய வேட்டியைப் போன்றது தொட்ட இடமெல்லாம் கிழியும். ஒரு புறம் தைத்தால் மறுபுறம் பிய்த்துக் கொள்ளும், அப்பப்பா! எவ்வளவு தகராறுகள்! எத்தனை மனஸ்தாபங்கள் !! ஸ்டுடியோ தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தங்கள்; எடுத்த பிலிம் சுருணையை அடிக்கடி கழுவுவதற்கு ‘ஐஸ்’ இல்லாத தொல்லை; வெளிக் காட்சிகளைப் படமெடுக்க அடிக்கடி சவுண்ட் ட்ரக்” வெளி வர முடியாத நிலைமை. டெலி