பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

371


நாலைந்து பெண்களைப் பார்த்தேன். அவர்களில் எவரும் என் மனதுக்குப் பிடிக்கவில்லை. இப்போது புதிய நாடகத்தயாரிப்பில், தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில் நான் திருமணம் செய்து கொள்ள உண்மையில் விரும்பவில்லை. என்றாலும் பெரி யண்ணா விருப்பத்தை மறுக்காது ஒப்புக் கொண்டேன். சேலத்திலுள்ள எங்கள் நண்பர் திரு பஞ்சகதம் செட்டியார் சேலம் செவ்வாய் பேட்டையில் ஒரு பெண் இருப்பதாகவும், அவள் எனக்குப் பொருத்தமான பெண் என்றும் பெரியண்ணாவிடம் சொன்னதாக அறிந்தேன். சேலம் பெண்ணைப் பார்த்து வருவதற்காகத் தான் பெரியண்ணா என் ஒப்புதலை அறிய விரும்பினார் என்பது புரிந்தது. நான் இசைவு தெரிவித்ததும் பெரியண்ணா சேலம் போய் பெண் பார்த்துவர முடிவு செய்தார். அண்ணாவின் விருப்பற்திற்கு இணங்கினேன் என்றாலும் வடமொழி மந்திரங்கள் சொல்லாமல் தமிழ்த் திருமண முறையிலேயே எனக்குச் சடங்குகள் நடைபெற வேண்டும் என்பதை வற்புறுத்தினேன். இதைப் பெரியண்ணாவிடம் நேராகச் சொல்ல எனக்குத் துணிவு வரவில்லை. அண்ணா திரவியம் பிள்ளையவர்களிடம் அழுத்தமாகச் சொன்னேன். “அதற்கென்ன, அப்படியே செய்யலாம்” என்றார் அவர். நான் சேலம் மாப்பிள்ளையாக வேண்டும் என்பதில் மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார் எங்கள் பஞ்சநதம் செட்டியார்.

புதுமனை புகு விழா

நாகர்கோவிலில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மதுர பவனம் புதுமனை புகுவிழா 9-7-41இல் மிகச் சிறப்பாக நடை பெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக நானும் கே. ஆர். இராமசாமியும் சென்றிருந்தோம். என். எஸ். கே.யின் விருப்பத்திற்கிணங்க மேலும் ஒருநாள் அவர் இல்லத்தில் தங்கினோம். மதுர பவனம் திறப்பு விழா நடைபெற்ற அதே தேதியில் சேலம் செவ்வாய்ப் பேட்டையில் பெரியண்ணா எனக்குப் பெண் பார்த்ததாக அறிந்தேன். 11-7-41 இல் நானும் சகோதரர் இராமசாமியும் பாளையங்கோட்டை வந்து தங்கை காமாட்சி வீட்டில் தங்கினோம். என்னை உடனே அவசரமாகப் புறப்பட்டு வரும்படி மதுரையிலிருந்து சின்னண்ணா தந்தி கொடுத்திருந்தார். மறுநாட் காலை நானும் இராமசாமியும் மதுரை வந்து சேர்ந்தோம். சேலத்தி