பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376


அனைத்தும் தயாராயின, சாதாரணக் காவலர் உட்பட எல்லாப் பாத்திரங்களுக்கும் புதிய உடைகள் தைக்கப் பட்டன. திருக் குறிப்புத் தொண்ட நாயனார் பகுதிக்குத் தேவையான மின்னல். இடி-மழைக்காட்சி பரணில் நீண்ட குழாய்கள் பொறுத்தி எல்லோரும் வியப்புறும் வண்ணம் மேலிருந்து மழைகொட்டும்படி தந்திரக் காட்சியாக அமைக்கப் பெற்றது. ஏற்கனவே பல முறைகள் நடைபெற்ற பழைய சிவலீலாவை மீண்டும் சில நாட்கள் ஒத்திகைப்பார்த்து ஒர் உன்னதமான கவலைப்படையாக உருவாக்கினோம். 27-7-1941 ஞாயிறன்று மதுரை கோபாலகிருஷ்ணா தியேட்டரில் சிவலீலா பிரமாதமான விளம்பரத்துடன் தொடங்கியது. எங்களுக்கும் நல்ல காலம் பிறந்தது. சூலமங்கலம் பாகவதரும் அவரது குடும்பத்தினரும் புதிய தயாரிப்பை வந்து பார்த்துப் பூரித்துப் போனார்கள்.

தம்பி பகவதியின் சாதனை

திருச்சிக்குப் பிறகு சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் மதுரையில்தான் மீண்டும் வந்து, சிவலீலாவைப் பார்த்தார். நான் கோவைப் படப்படிப்பில் ஈடுபட்டிருந்தபோது அவரிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. அதில், நான் இல்லாமல் சிவலீலா நடைபெறுவது குறித்து மிகவும் வருத்தப்பட்டு எழுதியிருந்தார். பகவதியின் நடிப்பில் அவருக்கு நம்பிக்கை இல்லை. திருப்பூரில் சிவலீலா தொடர்ந்து நடைபெற்றபோது, நான் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் திருப்பூருக்கு நாடகம் பார்க்க வந்து விடுவேன்; சபையில் அமர்ந்து சிவ லீலா நாடகத்தை நானே பல முறை பார்த்திருக்கிறேன். விறகுவெட்டி, புலவர், சிவனடியார், சித்தர், வலைஞன் ஆகிய வேடங்கள் என்னைவிடப் பகவதிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தன. தோற்றப் பொலிவு எந்த நாடகத்திற்கும் இன்றியமையாத ஒன்று. தம்பி பகவதி பார்வைக்கு என்னைவிடப் பெரியவராகத் தோன்றுவார். அது மட்டுமல்ல; என் குரல் மென்மையானது. பகவதியின் குரல் கம்பீரமானது. சிவலீலாவில் நான் புனைந்த வேடங்கள் யாவற்றிலும் பகவதி என்னைக்காட்டிலும் பன்மடங்கு சிறந்து விளங்கினார். எனவே, நான் மீண்டும் அந்த வேடங்களைப் புனைய விரும்பவில்லை. நாடகத்தின் நடுவே வரும் சண்பக பாண்டியன் என்னும் சிறிய வேடத்தை ஏற்று நடித்தேன். இந்த விவரங்களையெல்லாம்