பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378


உலர்த்தினோம், நாடகம் 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. விடா மழையிலும் பெருங் கூட்டம் வந்திருந்தது. இசைச்செல்வர் இலட்சுமணபிள்ளை, திருமுருக கிருபானந்த வாரியார், சர். பி. டி. இராஜன் மூவரும் இடையே நடைபெற்ற நாடகங்களில் தலைமை தாங்கி வாழ்த்தினார்.

நக்கீரர் நாராயணபிள்ளை

சிவலீலாவில் நக்கீரராக நடித்த என். எஸ். நாராயண பிள்ளையைப் பற்றிச் சில வார்த்தைகள் இங்கே குறிப்பிட்ட விரும்புகிறேன். இவர் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர். கோல்டன் சாரதாம்பாள் கம்பெனியில் நடிகராக இருந்து புகழ் பெற்றவர். 1937இல் எங்கள் குழுவில் சேர்ந்தார். பெரும்பாலும் நகைச் சுவைப் பாத்திரங்களையே ஏற்பார். நன்றாக நடிப்பார். தமிழில் புலமை பெற்றவர். இயல்பாகவே திறமையாகப் பேசும் ஆற்றல் வாய்ந்தவர். எங்கள் குமாஸ்தாவின் பெண் நாடகத்தில் ஜோஸ்யர் பாத்திரத்தைத்தாங்கி அற்புதமாக நடித்து வந்தார். திரைப்படத்திலும் இவரே ஜோஸ்யராக நடித்தார். குமாஸ்தாவின் பெண் கடைசிக் காட்சியில் மாப்பிள்ளையின் தகப்பனார் வேடத்திலும் இவரே நடித்தார். பெண் வீட்டாரிடம் பணம் பிடுங்குவதற்காக இவர் கோபித்துக் கொண்டு வெளியேறும் கட்டத்தில் அபாரமாக நடித்து அவையோரின் பாராட்டுதலைப் பெறுவார். தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில் இவர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நக்கீரராக நடித்தார். தருமியிடமும், தருமிக்காக வாதாட வரும் புலவரிடமும் இவர் உரையாடும் பாங்கு மிகச் சிறப்பாக இருக்கும். கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி என்னும் செய்யுளை இவர் தெளிவாக எடுத்துச் சொல்லி, அதில் குற்றம் கூறும் தோரணையும், இவருடைய கம்பீரமான தோற்றப் பொலிவும், இறைவன் நெற்றிக் கண்ணைத் திறந்து, “நக்கீரா குற்றந்தானா?” என்று கேட்கும் போது, “புலவரே, நீரே முக்கண் முதல்வனுயினுமாகுக; உமதுநெற்றியில் காட்டிய கண்ணைப்போல் உடம்பெல்லாம் கண்ணாக்கிச் சுட்டாலும் உமது கவியிற் குற்றம் குற்றமே; நெற்றிக்கண் திறக்கினும் குற்றம் குற்றமே” என்று வீர முழக்கம் செய்யும் கட்டம் எழுச்சி