பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

381


விரதமுனி வரர் விபுதர் உரக ரேனோர்
விழைந்துதவம் புரிந்திடினும் மேவு றாத
சரதமுறு சிவலீலை புரியூரீ பால
சண்முகா னந்தசபை தனிற்கண் டோமே!

சிவபத்தி அடியர்பத்தி சிறந்த கச்சித்
திருகுறிப்புத் தொண்டர் பத்தித் திறனைக் கண்டு
நவபத்தி யுலகிலுளோ ரடையும் வண்ணம்
நடித்தாகா டகத்திறனை காமென் சொல்கேம்!
பவசத்தி தனையகற்றும் நெறிகைக் கொண்ட
பண்புறுகா டகசபையின் பால சீலர்
தவசத்தியுறுதலைவர் தூய பால
சண்முகா னந்தசபை தழைத்து வாழி!

நாவலர் எஸ். சோமசுந்தர பாரதியார் அவர்கள் எம். ஏ., பி. எல்.

“ஸ்ரீபால சண்முகானந்த சபையார் நடத்தும் சிவலீலா என்னும் நாடகத்தைப் பல நண்பர் பார்த்து வந்து புகழ்ந்ததைக் கேட்டு 26.10.41 இல் நானும், என் குடும்பத்தாரும் போய். பார்த்தோம். நன்றாயிருந்தது என்று சொல்லுவது நான் அனுப வித்த உணர்ச்சியை விளக்கப் போதாது. தற்காலம் நடிக்கப்படும் தமிழ் நாடகங்கள் குலப் பெண்களோடு கண்டுகளிக்கக்கூடாத தாயும்,கல்லாத மாந்தர்க்கன்றி நல்லோர் உவக்கக்கூடாததாயும் இருந்து வருவதால் சுமார் 40 ஆண்டுகளாக நான் ஒரு தமிழ் நாடகத்தையும் பார்க்காமல் வெறுத்திருந்தேன். சிவலீலாவைக் கண்ட பிறகுதமிழரும் நல்ல முறையில் அறிவுடையார் மகிழ, கண்டார் மனதில் அறநிலைகள் உறைக்க, இன்பமும் உணர்வும். ஒன்றி உவக்க, நடிகர்கள் தமிழில் நாடகம் நடத்தக்கூடுமென்று நம்பலானேன்.

அவரவர் நிலையில், அவரவர் நடிப்புச் சிறந்திருந்தது. இவ் வாறு சமயக் கதைகளை வழுவற நடித்துச் சான்றாேர் மகிழச் செய்வதால் சமயத்தில் அன்பும் மதிப்பும் வளர்வதாகும். காத லின்பமும் தூய முறையில் காட்டப்பெற்றது. காட்சிகளெல்லாம் இயற்கையின் மாட்சி தோன்ற இனிது சமைக்கப்பட்டிருந்தது.