பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

393


வேண்டுமென அவர் சின்னண்ணாவிடம் விரும்பிக் கேட்டார். அவர் பாடல்கள் இயற்றக்கூடிய திறமையுடையவரென்று அது வரையில் எனக்குத் தெரியாது. இரட்டிப்பு மகிழ்வோடு அவரையே பாடல்கள் எழுத அனுமதித்தார் அண்ணா. பெரும்பாலான பாடல்கள் ஒளவையாரே பாடியவை. இவற்றைத்தவிர மாகாகவி பாரதியார், புரட்சிக் கவினார் பாரதிதாசனார், கவிமணி தேசிக விநாயகனார், இசைச் செல்வர் இலட்சுமணப்பிள்ளை, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோரின், ‘தமிழ்த் திருநாடுதனைப் பெற்ற’, ‘இனிமைத் தமிழ்மொழி எமது’, ‘மங்கையராகப் பிறப் பதற்கே’, ஒன்றே உயர்சமயம், ‘தேகம் நிலையுள்ள தல்லவே’ ஆகிய பாடல்களையும் நாடகத்தில் தக்க இடத்தில் சேர்த்துக் கொண்டோம். இவற்றைத் தவிர சில பாடல்களே தேவை பட்டன. அவற்றை வேங்கடாசலம் மிக நன்றாக இயற்றி உதவினார். அவரே நாடகத்தில் பாரி வள்ளலாகவும் நடித்தார்.

டி. என். சிவதானுவும், பிரண்டுராமசாமியும் நகைச்சுவை பாத்திரங்களை ஏற்றனார். அவர்கள் ஏற்றபாத்திரங்கள் அனைத்தும் ஒளவையாரின் நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்டவை. எனவே ஒளவையாரின் பாத்திரத்திற்கு மேலும் பெருமை சேர்க் கும் வகையில் அவர்களுடைய நகைச்சுவை அமையவேண்டும் என ஆலோசனைக் கூறினேன்.

கலைமகள் தடுமாறினாள்

ஒளவையின் தொடக்க நாளிலேயே சில சகுனத் தடைகள் ஏற்பட்டன. நாடகத்தின் முதல் காட்சி இது. வானத்தில் மேகங்களின் இடையே செந்தாமரையில் பிரமனும், வெண்தாமரையில் கலைமகளும் தோன்றுகின்றனார். பிரமன் பூலோகத்தில் ஒளவையாக அவதரித்து அருந்தமிழ் மொழிக்குத் தொண்டு புரிந்து வருமாறு கலைவாணிக்கு ஆணையிடுகிறார். கலைமகள் அயனின் ஆணைக்கு அடிபணிகிறார். செந்தாமரை, வெண்தாமரை, இரண்டையும் பெரிதாகச்செய்து அவற்றின் நடுவே பிரம்மனையும், கலைமகளையும் இருத்தித் தாமரைகளின் இதழ்களை மூடிவிட்டு, இருதாமரைகளை யும் வால் பெட்டியோடு இணைத்து வைப்போம். முதல் வேட்டுக்குப் பிரமன் தோன்றுவார். இரண்டாவது வேட்டுக்குக் கலைமகள் காட்சி அளிப்பார். வேட்டுச்சத்தம் கேட்டாலும் தாமரையை