பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406


குளோப், மிகப் பெரிய கோப்பை இவற்றையெல்லாம் வழங்கி உற்சாகம் ஊட்டினார்கள். காமடியன் சாரங்கபாணி மகாத்மா காந்தியடிகளின் வெள்ளிச்சிலை ஒன்றினைப் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும். ஏறத்தாழ நாலரை மாத காலம் கும்ப கோணத்தில் நல்ல வசூலுடன் நாடகம் நடந்தது. குடும்ப நிலைமைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கோடு, சின்னண்ண டி. கே. முத்துசாமியைப் பெரியண்ணா நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்தார். நாங்கள் குடந்தையிலிருந்து கருரூக்குப் பயணமானோம். பிடில் இராஜ மாணிக்கம்பிள்ளை உள்ளிட்ட குடந்தை நகரப் பிரமுகர்கள் அனைவரும் ரயில் நிலையத்துக்கு வந்து எங்களுக்குப் பிரியாவிடை அளித்தனார்.

மதுரையில் முத்தமிழ் மாகாடு!

நாங்கள் ஓராண்டு காலப் மதுரையம்பதியில் தொடர்ந்து நாடகங்களே நடத்தியதன் காரணமாகவும், சிவலீலா, ராஜப் பர்த்ருஹரி, ஒளவையார் ஆகிய மூன்று இலக்கியத் தரமுள்ள நாடகங்களை அரங்கேற்றியதன் காரணமாகவும் மதுரை நகரப் புலவர் பெருமக்களிடையே ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டிருந்தது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முத்தமிழ் மாநாடு நடத்த முயன்றனார். சர். பி. டி. இராஜன் அவர்கள் வரவேற்புக் குழுவின் பொதுத்தலைவராகவும், எல்.கிருஷ்ணசாமி பாரதி அவர்களைப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுத்தனார். 1942 ஆகஸ்டு 1, 2, 3 தேதிகளில் மதுரை புது மண்டபத்தில் முறையே இயல்-இசை நாடக மாநாடுகள் நடைபெற்றன. இயல் மாநாட்டுக்கு சுவாமி விபுலானந்த அடிகளார் தலைவராகவும், இசை மாநாட்டுக்கு திருவனந்தபுரம் இசைச் செல்வர் தி. இலக்குமணப் பிள்ளை தலைவராகவும், நாடக மாநாட்டுக்கு ராவ்பகதூர் பம்மல் சம்பந்த முதலியார் தலைவராகவும் இருந்து சிறந்த சொற்பொழி வாற்றினார்கள். நாடக மாநாட்டின் வரவேற்புத் தலைவராக சின்னண்ணா டி.கே. முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு தமிழ் நாடக வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளைக் கூறினார். அவர் இந்தச் சமயம் நாகர்கோவிலில் இருந்ததால் மூன்று நாள் மாநாடுகளிலும் கலந்து கொண்டார். டி. கே. முத்துசாமி அவர் களின் யோசனைப்படி நாடக மாநாட்டில் பல தீர்மானங்களும் நிறைவேறின;