பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408


பொறிகள் பறப்பதும், அவை சரவணப் பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகள் ஆவதும் கார்த்திகைப் பெண்கள் அக்குழந்தை களைத் தாலாட்டுவதும், பின் அவர்கள் நட்சத்திரங்களாவதும் அருமையான காட்சிகள். மின்சாரத்தின் துணையோடு மிக அற்புத மாக இவற்றை உருவாக்கிக் காட்டினார் மின்சார நிபுணர் ஆறுமுகம் 1943 ஜனவரி 1 ஆம் தேதியன்று கந்தலீலா அரங்கேறியது. சிறந்த பாடகர் எம். எஸ். வேலப்பன் சுப்பிரமணியராக வும்; நான் நாரதராகவும், பகவதி சூரபத்மனாகவும், டி. வி. நாரயணசாமி சிவபிரானுகவும் நடித்தோம். நாடகம். மிகச் சிறப்பாக அமைந்தது.

பண்டித இராமசர்மா

கரூர் பிரபல ஆயுர்வேத வைத்தியர் பண்டித இராமசர்மா வுடன் எங்களுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அவர் சிறந்த நாடக ரசிகர். அவரும் அவரது சகோதரரும் நாடகங்களை ஆர்வத்தோடு வந்து பார்ப்பார்கள், நோய், நொடி என்றால் அவரைத் தான் அணுகுவோம். அன்பும் பன்பும் நிறைந்த உத்தமமான மருத்துவர். கரூருக்கு வந்த சில நாட்களில் என் மனைவி நோயுற்றாள். எப்போதும் அவள் உடம்பு கதகதப்பாகவே இருந்தது. அடிக்கடி இருமிளுள். இராமசர்மா அவள் உடல் நிலையை நன்குகவனித்து ஏதேதோ மருந்துகள் கொடுத்தார். நோய் குணமாகவில்லை. ஒருநாள் என்னைத் தனியே அழைத்தார்.

“மனைவியைத் தாய்வீட்டுக்கு அனுப்பி வைப்பது நல்லது” என்றார்,

“ஏன் நீங்களே குணப்படுத்தமுடியாதா?” என்றேன் நான்.

“கணவனைவிட்டுப் பிரிந்திருந்தால் விரைவில் குணப்படலாம்” என்றார் சர்மா.

அவர் வற்புறுத்தலின் மீது நான் மனைவியைச் சேலத்துக்கு அனுப்பி வைக்க ஒப்புக் கொண்டேன். சேலத்துக்குத் தகவல் அறிவித்தேன். சாந்தாவின் தமையன் வந்து அவளை அழைத் துச் சென்றார். என்னைப் பிரிய மனமில்லாதவளாய் சாந்தா கண் கலக்கத்துடன் பிரிந்து சென்றாள். சேலம் சென்ற பிறகும்