பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

417


விழுந்ததால் மார்பில் பலத்த அடி. அப்படியே தூக்கிப் போய் மின்சார விசிறியின் கீழே படுக்க வைத்தோம். சோடா கொடுக் கப்பட்டது. ஆஞ்சனேயரின் உடை ரோமம் போல் தோன்று வதற்காக அடுக்காகத் தைக்கப்பட்டு, மெத்தை போன்றமைக்கப் பட்டிருந்ததால். அபாயும் எதுவும் ஏற்படவில்லை. இரண்டொரு நிமிடங்களில் சமாளித்துக் கொண்டார். நாடகம் தொடர்ந்து நடைபெற்றது.

இளம் நடிகர் எஸ். வி. சுப்பையா

கலைமாமணியென இன்று நம்மால் போற்றப்பெறும் நடிகர் எஸ். வி. சுப்பையா அப்போது கம்பெனியில் இருந்தார். 1939 இறுதியில் திருச்சிராப்பள்ளியில் இருந்தபோதே அவர் எங்கள் குழுவில் சேர்ந்தார். நன்றாகப் பாடுவார். பல்வேறு நாடகங் களில் சிறிய வேடங்களைப் புனைந்து வந்தார். சிவலிலா மதுரை யில் தொடர்ந்து நடைபெற்றபோது, சிவபெருமானைக் கால் மாறி ஆடச்சொல்லும் அபிஷேகப் பாண்டியனாக நடித்தார். நடிகர்கள் ஏராளமாக இருந்ததால் பெரிய வேடங்களைத் தாங்கி நடப்பதற்குரிய வாய்ப்பு அப்போது அவருக்குக் கிடைக்கவில்லை. அன்று அவர் புனைந்த பாத்திரங்களிலே குறிப்பிடத்தக்கதாக இருந்தது கர்ணன். ஆம், மகாபாரதம் மாதக் கணக்கில் தொடர்ந்து நடைபெறும் நாடகமாகஇருந்தது. அதில் சுப்பையா கர்ணனாக நடித்தார், குந்தியும் கர்ணனும் சந்திக்கும் காட்சியில் மிக உருக்கமாக நடித்தார். சபையோரை மட்டுமல்ல. உள்ளிருந்த எங்களேயெல்லாங்கூடக் கண்கலங்க வைத்தார். அவரை மேலும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பினை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தோம்.

அடக்கம் நிறைந்த ஆர். எம். வீரப்பன்

இப்போது சத்யா மூவீசின் அதிபராக விருக்கும் ஆர். எம். வீரப்பன் அவர்கள் அப்போது எங்கள் நாடகக் குழுவில் இருந்தார். அடக்கமான இளைஞர். யாரோடும் வம்புக்குப் போக மாட்டார். சின்னச் சின்ன வேடங்கள் புனைவார். அவருடைய கையெழுத்து அந்தச் சிறு வயதிலேயே அழகாக இருந்தது.