பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

420


பிடிவாதமாக வேடம் புனைய மறுத்து விட்டார். உடனே நான் கே. ஆர். இராமசாமியை வசுதேவர் போடச் சொல்லி விட்டு சுப்பையாவையும் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள என் விட்டிற்குச் சென்றேன். கிருஷ்ணலீலாவில் எனக்கு வேடம் இல்லையாதலால் நிறைய நேரம் கிடைத்தது. வேடம் புனையாததற்காகப் பெரியண்ணா மீண்டும் வந்து அடிப்பார் என்பதைச் சுப்பையா நன்றாக அறிவார். ஆனாலும் அவருக்கு அசட்டுப் பிடிவாதம் ஏற்பட்டிருந்தது. மேலும் அடிபடவும், வேடம் புனையாததன் விளைவுகளை ஏற்கவும் சுப்பையா சித்தமாக இருந்தார். நான் சுப்பையாவுக்கு அறிவுரைகள் கூறினேன். என்னத்தான் இருந்தாலும் வேடம் புனைய மறுத்தது தவறு என்பதை அவருக்கு உணர்த்தினேன். பெரியண்ணாவின் கோபத்தை நன்கு உணர்ந்தவன் நான். விடிந்தால் சுப்பையாவுக்கு என்ன நேருமோ என்று எனக்கு அச்சமாக இருந்தது. சுப்பையா மேற்கொண்டு கம்பெனியில் இருக்கவும் விரும்பவில்லை. இரவோடிரவாக அவரை ஊருக்கு அனுப்பி விடுவது நல்லது என எனக்குத் தோன்றியது. அவரும் என் யோசனையை ஏற்றார், கையிலிருந்த சிறு தொகையை அவரிடம் கொடுத்தேன். அன்றிரவே அவரைப் பாதுகாப்பாக. ஊருக்கு அனுப்பிவைத்தேன். எல்லோரும் சுப்பையா தானாகவே ஒடி விட்டதாக எண்ணினார்கள். நானே அவரை அனுப்பினேன் என்பது பெரியண்ணாவுக்குக் கூடத் தெரியாது.

கலைமாமணி கே. பி. கேசவன்

ஒருநாள் பழம் பெரும் கலைஞர் கே. பி. கேசவன் மனோகரா நாடகம் பார்க்க வந்திருந்தார். நாடகம் முடிந்ததும் உள்ளே வந்து என்னைப் பாராட்டினார். தன் இல்லத்திற்கு ஒருநாள் விருந்துண்ண வர வேண்டுமென்று அழைத்தார். அழைப்பினை ஏற்று ஒலவக்கோட்டிலுள்ள அவரது இல்லத்திற்குத் தம்பி பகவதி, சிவதாணு, கே. ஆர். இராமசாமி ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். மலர்ந்த முகத்துடன் எங்களே வரவேற்றார் கேசவன். கம்பெனியின் பழங்கால நிகழ்ச்சிகளைப் பற்றி வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விருந்துண்ட பின்னும் பேச்சு முடியவில்லை. நாடகம் இருந்ததால் விடைபெற்றுக் கொண்டு திரும்பினோம்.