பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

421


கே. பி. கேசவன் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் சிறந்த நடிகர்களிலே ஒருவர். நன்றாகப் பாடவும் திறமை வாய்ந்தவர். அவரது ஆற்றல்மிக்க நடிப்பினை ஏற்கனவே நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். 1934இல் நாங்கள் விருத்தாசலத்தில் இருந்த போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் கூடலூர் முத்தையா தியேட்டரில் பம்பாய் மெயில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது எங்கள் கம்பெனியிலும் பம்பாய் மெயில் முக்கிய நாடகமாக இருந்ததால், கே. பி. கேசவனின் பம்பாய் மெயில் நாடகத்தைப் பார்க்க ஆசைப்பட்டேன். எங்களுக்கு நாடகம் இல்லாத நாளில் இதற்காகவே கூடலூர் சென்றேன். பம்பாய் மெயில் நாடகம் பார்த்தேன். நாடகத்தில் கே. பி. கேசவனின் அபாரமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. நாடகம் முடிந்ததும் அவர் வருகைக்காகக் காத்திருந்து நேரில் சந்தித்தேன். மனமாரப் பாராட்டி விட்டு விருத்தாசலம் திரும்பினேன். கே. பி. கேசவனின் பம்பாய் மெயில் நடிப்பைப் பார்த்தது எனக்குமிகவும் பயனுடையதாக இருந்தது. அதன் பிறகு நான் நடித்த பம்பாய் மெயிலில் புதிய மெருகுடன் நடித்தாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

திரைப்பட உலகில் கே. பி. கேசவன் நடித்த பதி பக்தியும் இரு சகோதரர்களும் இன்னும் கூட என் நினைவிலிருந்து அகல வில்லை. தமிழ் நாடக உலகை விட்டு அவர் விலகிய வெகு காலத்திற்குப் பிறகுகூட, தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் சிறந்த நாடக நடிகருக்குரிய விருதினை அவருக்கு வழங்கவேண்டுமென்று, நான் ஆர்வத்தோடு பரிந்துரைத்தேன். கே.பி. கேசவன் சென்னை க்கு வந்து சங்கத்தின் விருதினைப் பெற்றுக் கொண்டபோது, அப்படியே அவரைக் கட்டித் தழுவிக் கொண்டேன்.

கலைவாணர் கடிதம்

சென்னையிலிருந்து கலைவாணர் கிருஷ்ணன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். கே. ஆர். இராமசாமியை சிவசக்தி என்னும் படத்தில் கதாநாயகனுக நடிக்க ஏற்பாடு செ ய்திருப்பதாகவும் அவரை அனுப்புவதால் கம்பெனிக்குத் தொந்தரவு எதுவும் இல்லை யென்றால் பெரியண்ணாவிடம் கூறி அனுப்பிவைக்க வேண்டு,