பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

425


யிருந்தார்கள்.கம்பெனிசாமான்கள் தியேட்டரில்வந்து இறங்கின. பட்டக்காரர் பங்களா தியேட்டரின் அருகே இருந்ததால் பல லாரிகளில் வந்து இறங்கிய எங்கள் நாடகசாமான்களைப் பார்க்கப் பட்டக்காரர் நல்ல தம்பி சர்க்கரை மன்றாடியாரும், கைவல்ய சாமியாரும் வந்தார்கள். வீடு கிடைக்காத நிலையைப்பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம். ஏன் நம்முடைய பங்களா காலியாக தான் இருக்கிறது. எங்களுக்குச் சில அறைகள்தான் வேண்டும். பின்புறம் முழுதும் நீங்களே தங்கிக்கொள்ளலாம். வேறு இடம் பார்த்துச் சிரமப்படவேண்டாம்” என்று பரிவோடு கூறினார் பட்டக்காரர். எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அன்றே மீனாட்சி அக்காள், பகவதி தம்பதிகள், சிவதாணு தம்பதிகள் எல்லோரும் பட்டக்காரர் பங்களாவில் குடியேறினார். எனக்கும் அங்கேயே தனியாக ஒர் அறை ஒதுக்கித் தர ஏற்பாடு செய்தார் பட்டக்காரர். நாடகங்களைப் பார்ப்பதற்காகப் பட்டக்காரர் குடும்பத்தார் அடிக்கடி பங்களாவில் வந்து தங்குவார்கள். அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் நெருங்கிய நட்பு ஏற் பட்டது.

கைவல்ய சாமியார்

பட்டக்காரர் நாடகம் பார்க்க வரும்போதெல்லாம் கை வல்ய சாமியாரும் வருவார். சாமியார் சிறந்த ஆராய்ச்சியாளர். உலாகானுபவம் நிறைந்தவர். காவி கட்டாத வெள்ளை வேட்டிச் சாமியார் இவர். இவரது பகுத்தறிவுக் கட்டுரைகளைப் பெரியாரின் ‘குடியரசு’ வார இதழில் தொடர்ந்து படித்தவன் நான். மேலட்டையைப் புரட்டியதும் முதல் பக்கத்தில் கைவல்ய சாமியாரின் கட்டுரை தான் காணப்படும். சாமியாரிடம் மிகுந்த அன்பு செலுத்தி வந்தார் பட்டக்காரர். பங்களாவின் முகப்பிலுள்ள ஹாலில் நான் சாமியாரைச் சந்திப்பேன். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார் இவர். எல்லோரும் இவரை “சாமி” என்றே அழைப்பார்கள். பட்டக்காரரின் இரண்டாவது மகன் திரு. அர்ச்சுனன் முற்போக்கான இளைஞர். சுயமரியாதைக் கொள்கைகளைப் பின் பற்றுபவர். பெரியாரிடம் மிகுந்த ஈடுபாடுடையவர். கைவல்ய சாமியாரின் உபதேசத்தால்தான் இளையவர் அர்ச்சுனன் கெட்டுப் போய் விட்டார் என்று பங்களாவிலுள்ள ஊழியர்கள் பேசிக்