பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

429


அவசர அவசரமாக ஒரு சாவியை என்னிடம் கொடுத்தார். பக்கத்தில் நம்முடைய புதிய வீடு இருக்கிறது. சுயமரியாதை சங்கத்திற்காக வாங்கியது, சுண்ணாம்பு அடித்துச் சுத்தமாக வைத்திருக்கிறது. உடனே அங்கே கொண்டு வந்து படுக்க வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார். நான் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. பெரியாருக்கு நன்றி கூறிவிட்டுப் பெருந்துறைக்கு விரைந்தேன். அன்று மாலையே என் மனைவி ஈரோட்டுக்குக் கொண்டுவரப்பட்டாள்.

விளக்கு அணைந்தது

சேலத்திற்குத் தகவல் அறிவிக்கப்பட்டது. உறவினார்கள் வந்தனார், இளமைக் கனவுகள் நிறைவேற்றாமல் ஏக்கத்தோடு என்னை விட்டுப்போகும் இல்லாள் மீனாட்சிக்காக எல்லோரும் கண்ணிர் விட்டனார்.

நவம்பர் முதல்நாள் மாலை உற்றார் உறவினார் சூழ, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் மீனாட்சி படுக்கையிலே கிடந்தாள். “அவளை அமைதியாக இருக்க விடுங்கள்” என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அருகிலுள்ள தமிழன் அச்சகத்திற்குள் நுழைந்தேன். எழுதாமல் விட்டிருக்கும் ஒளவை நாடக நூலின் பதிப்புரையினை எழுதத் தொடங்கினேன். சிந்தனையை ஒருமுகப்படுத்திக் கொண்டு ஒருவாறு எழுதி முடித்தேன். யாரோ வந்தார்கள். மனைவி என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்கள். விரைந்து சென்றேன். மனைவியின் அருகில் அமர்ந்தேன். தனியே பேச விரும்பியதால் எல்லோரும் சற்று விலகி நின்றார்கள்.

“இன்னும் இரண்டு நாட்களில் நான் இறந்துவிடப் போகிறேன் என்று டாக்டர் சொல்லிவிட்டாரா? இதற்காகத்தான் என்னை ஈரோட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள். அவள் கேள்வி என் நெஞ்சை உருக்கியது. யாரோ அவளிடம் சொல்லியிருக்கிறார்கள். அறிவிருக்கும் நிலையில் நல்ல நினைவோடு படுத்திருக்கும் அவள் தாங்க இயலாத இந்த வேதனையை எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்? “இன்னும் இரண்டு நாட்களில்