பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணாவின் சந்திரோதயம்

பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய முதல் நாடகம் சந்திரோதயம். அஃது காஞ்சிபுரத்தில் ஒத்திகைப்போல் ஒருமுறை நடைபெற்றது, ஈரோட்டில் பெரியார் அவர்கள் முன்னிலையில் தான் அந்நாடகத்தின் உண்மையான அரங்கேற்றம் நடைபெறப் போகிறது என்று அண்ணாவே என்னிடம் கூறினார். அண்ணாவிடம் , பற்று கொண்டிருந்த எங்கள் நடிகர்களுக்கெல்லாம் ஒரே ஆனந்தம். நாடகத்தில் அண்ணாவே முக்கிய வேடம் தாங்கி நடிக்கப் போகிறார். என்பதை அறிந்ததும் எங்களுக்கெல்லாம் எல்லையற்ற மகிழ்ச்சி. நாடகத் தேதியை எதிர்பார்த்துக் காத்தி திருந்தோம். 19-11-43இல் சந்திரோதயம் நடைபெறப் போவதாக விளம்பரம் செய்யப் பெற்றது

தேதியும் நெருங்கியது. சந்திரோதயம் நாடகத்திற்கு முதல் நாள் எங்கள் சம்பூர்ண இராமாயணம் நடைபெற்றது. காலை 6 மணிவரை நடைபெறும் நாடகமல்லவா? நாடகம் முடிந்ததும் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, காலை எட்டு மணிக்கே சாப்பாட்டை முடித்துக் கொண்டு எங்கள் நடிகர்கள் அஃனவரும் நன்றாக உறங்குவது வழக்கம். ஆனால், அன்று மேடையில் சந்திரோதயத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதால், எங்களில் பெரும்பாலோர் உறங்கவில்லே. இரவு நாடகத்திற்காக நாடக மேடையில் தேவையான காட்சிகள்-நடிகர்களுக்குரிய உடைகள் யாவற்றையும் ஒழுங்குபடுத்துவதில் பெரும் பங்கு கொண்டோம்.

பெரியார் முன்னிலையில்

சந்திரோதயம் நடிகர்களுக்கு ஒப்பனை செய்வதில் நாங்கள் எல்லோரும் பங்கு கொண்டோம். சி. வி. இராஜகோபால் எம். எல். சி.,வி. எம். அண்ணாமலை எம். எல். ஏ, ஈழத்து அடிகள் முதலியோர் அன்று நாடகத்தில் நடித்ததாக நினைவிருக்கிறது. மற்றவர்