பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

437


முதலியார், எம். என். எம். பாவலர், எம். கே. தியாகராஜ பாகவதர், டி. கே. ஷண்முகம் ஆகியோருக்குப் பட்டங்கள் வழங்கிப் பாராட்டுவதென்றும், மாநாட்டுக்குக் கட்டணம் வைத்து நடத்தவேண்டுமென்றும் ஒருமனதாக முடிவெடுத்தனார்.

குழுவினரின் முடிவுப்படி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடிதங்கள் எழுதியும், நேரில் சந்தித்தும் ஒப்புதல்கள் பெறப் பட்டன. 1944 பிப்ரவரி 11ஆம் தேதி ஈரோடு சென்ரல் தியேட்டரில் மாநாடு சிறப்பாக நடைபெறுமென விளம்பரம் செய்யப்பெற்றது.

நிகழ்ச்சிகளின் பட்டியல்

தொழில்முறை சபைகள், பயில்முறை சபைகள் என்ற வேறு பாடின்றி எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது தமிழ்நாட்டிலிருந்த பெரும்பாலான நாடக சபைகளின் பிரதிநிதிகள் மாநாட்டின் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டார்கள். இலங்கைத் தமிழரின் பிரதிநிதியாக ஏ. கே. இராமலிங்கம் என்பவர் மாநாட்டில் பங்குகொண்டார். முற்போக்கான கொள்கைகளைக் கொண்ட சீர்திருத்தவாதிகளும் தம் கருத்துக்களை வெளிப்படையாக எடுத்துச்சொல்லி மாநாட்டைச் சிறப்பித்தனார். காலை-மாலை நிகழச்சிகள் பின் வருமாறு ஒழுங்கு செய்யப் பெற்றன.

காலை நிகழ்ச்சிகள்
கொடியேற்று விழா ... ராவ்பகதூர் சம்பந்த முதலியார்
திறப்பு விழா ... எம். கே. தியாகராஜ பாகவதர்
வரவேற்புரை ... ஆர். கே. வேங்கடசாமி
தலைமைப் பேருரை ... சர் ஆர். கே. சண்முகம் கே. சி. ஐ. ஈ.
சங்கரதாசர் படத்திறப்பு ... எம். என். எம். பாவலர்
கந்தசாமி முதலியார் படத்திறப்பு ... டி. கே. ஷண்முகம்