பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

440


“ஒரு குழப்பமும் நேராது; மாநாடு ஒழுங்காக நடைபெறும்” என்று உறுதி கூறினார்.

நிருவாகக் குழுக் கூட்டம்

மாநாடு நடைபெறுவதற்கு முந்திய நாள் மாலை நிருவாக குழுக் கூட்டம் சென்ட்ரல் தியேட்டரில் நடைபெற்றது. நூற்றுக்கு மேற்பட்ட தீர்மானங்கள் வந்திருந்தன. அவற்றில் முத் தமிழ் நுகர்வோர் சங்கத்தார் புராண-இதிகாச நாடகங்களைக் கண்டித்துச் சில தீர்மானங்களை அனுப்பியிருந்தனர். டி. கே. எஸ். சகோதரர்கள் சார்பில் நாங்களும் சில தீர்மானங்களை இம் மாநாடு நிறைவேற்ற வேண்டுமெனக் கோரி அச்சிட்டு அனுப்பி யிருந்தோம். நீண்டநேரம் விவாதித்த பின் குழப்பம் நேருவதைத் தவிர்ப்பதர்காக, எந்தத் தீர்மானமும் மாநாட்டில் நிறைவேற்ற வேண்டியதில்லையென்றும் நூற்றுக்கு மேற்பட்ட தீர்மானங்கள் வந்திருப்பதால் அவற்றையெல்லாம் நன்கு பரிசீலனை செய்து அடுத்த மாநாட்டில் வைக்க வேண்டுமென்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டி. கே. எஸ். சகோதரர்கள் அனுப்பி யுள்ள தீர்மானங்களை நிறைவேற்றினல் ஆக்க பூர்வமாகச் செயலாற்ற நல்ல வாய்ப்பு கிட்டுமென்று நான் எவ்வளவோ வற்புறுத்தினேன். ஏற்கனவே குழப்பம், கறுப்புக்கொடி, கலகம் இவற்றைப்பற்றிப் பரவலாக நகர் முழுவதும் பேச்சு பரவி யிருந்ததால் நிருவாகக் குழுவினார் எந்தத் தீர்மானமும் நிறை வேற்ற இயலாதென உறுதியாக மறுத்து விட்டனார்.

மாநாட்டைச் சிறப்புற நடத்துவதில் எங்களுக்குத் தவறான உள்நோக்கம் எதுவும் இல்லையென்பதையும் நாடகக் கலை வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்ற முனைந்தோம் என்பதனையும் பின்னே வரும்.எங்கள் தீர்மானங்கள் எடுத்துக் காட்டும்.

தமிழ்நாடு நாடகக் கலை அபிவிருத்தி மாகாட்டிற்கு டி. கே. எஸ். சகோதரர்கள் அனுப்பியுள்ள தீர்மானங்கள்

1. நாடகக் கலை வளர்ச்சிக்கு உருப்படியான தொண்டாற்றத் “தமிழ்நாடு நாடகக்கலை வளர்ச்சிக் கழகம்” என்ற பெய