பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

441

ரால் கழகம் ஒன்று நிறுவ வேண்டுமென்றும், கழகத்தின் நேக்கங்களும் நிபந்தனைகளும் கிழ்க்கண்டவாறு இருக்கவேண்டு மென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

நோக்கங்கள்

(அ) தமிழர்களின் முன்னேற்றத்தையும், தமிழ்மொழி வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு சிறந்த நாடகங்களை இயற்ற எழுத்தாளர்களைத் துண்டுவதும், அவ்வாறு எழுதப்பட்ட நாடகங்களுக்குப் பரிசுகள் வழங்குவதும், அந்நாடகங்களைக் கழகத்தின் சார்பிலேயே புத்தகமாக வெளியிடுவதும்.

(ஆ) கழகத்தினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட நாடகங்களை நடிக்கும் சபையாருக்கும் சிறந்த நடிகருக்கும் பரிசுகள் வழங்குவது.

(இ) தற்போது தமிழகத்தில் நிரந்தரமாகத் தொழில் நடத்தும் நாடக சபைகளைக் கொண்டு மேற்படி நாடகங்களை நடிக்கத் துரண்டுவது.

(ஈ) ஒவ்வொரு ஊரிலும் நாடகக் கழகங்கள் அமைத்து, நாடக வருவாயை எதிர்பாராத அறிஞர்களை அங்கத் தினார்களாக்கி, மேற்குறித்த நாடகங்களை நடிக்கச் செய்வது.

(உ) கழகத்தின் சார்பில் மாநாடுகள் நாடெங்கும் கூட்டி நாடகக் கலையின் மேன்மை பற்றிப் பிரசாரம் செய்வது.

(ஊ) நாடகக் கலை வளர்ச்சிக்கென்று பத்திரிக்கைகள் தோற்றுவிப்பது.

(எ) நகரசபைகளின் நிர்வாகத்திலுள்ள ஒவ்வொரு நகரங் களிலும் கலை வளர்ச்சிக்காகவும், பொது உபயோகத் திற்காகவும் ஒவ்வொரு தியேட்டர் (திருச்சி நகரசபை ஹாலைப் போல) அமைக்கும்படி நகரசபைகளைத் தூண்டுவது.