பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

444


நண்பர்கள் அண்ணா அவர்களின் அறிவுரைக்கிணங்க அந்த எண்ணத்தைக் கைவிட்டனார் என்பதைப் பின்னல் அறிந்தோம்.

மாநாடு தொடங்கியது

மறுநாள் 11, 2- 44 காலை 9- 30- மணிக்கு தமிழ் மாகாண நாடகக் கலை அபிவிருத்தி மாநாடு ஈரோடு சென்ட்ரல் நாடக அரங்கில் துவங்கியது. அதிகாலை ஈரோடு வந்து சேர்ந்த மாநாட்டுத் தலைவர் ஆர். கே. சண்முகம் செட்டியார் கான்சாகிப் ஷேக்தாவுத் சாகிப் இல்லத்தில் தங்கியிருந்தார். அவரை அரங்கிற்கு அழைத்து வந்தார்கள். தலைவரைப் பிரேரேபிக்கும் போது அதை எதிர்த்துக் குழப்பம் செய்யத் திட்டமிட்டுச் சிலர் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனை யறிந்த ஆர். கே. சண்முகம், “தலைவர் பெயரைத்தான் விளம்பரப்படுத்தியிருக்கிறீர்களே, பின் ஏன் பிரேரணை, ஆமோதிப்பு, எல்லாம் வேண்டும்? அது ஒன்றும் தேவையில்லை. தலைவர் பிரேரணை இல்லாமலையே மாநாட்டைத் தொடங்கி விடலாம்” என்றார். நிர்வாகிகளுக்கும் அதுவே சரியெனப் பட்டது.

மேடையில் முன்திரை விடப்பட்டிருந்தது. அது துாக்கப் பட்டதும் மேலேயிருந்து வரிசையாகப் பூச்சரங்களைத் தொங்க விட்டு மேடை முழுதும் மறைத்திருந்தோம். கொடியேற்று விழாச் சொற்பொழிவினைப் பூச்சரங்களுக்கு முன்புறமே நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தார்கள். திறப்புரையின்போது ஒருகயிற்றைப் பிடித்துத் திறப்பாளர் இழுத்ததும் மேடையை மறைத்துத் தொங்கவிடப் பெற்றுள்ள பூச்சரங்கள் அப்படியே மேலுயர்ந்து விலகி மேடையை மறைக்காமல் இருபுறமும் அழகாகத் தொங்கி கொண்டிருக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள் எங்கள் காட்சி அமைப்பாளர்கள்.

முதலில்; ‘நாட்டினுக் கணிகலம் நாடகக் கலேயே’ என்னும் கவி ஆறுமுகனார் பாடலே அப்போது எங்கள் கம்பெனி முக்கிய நடிகரும் சிறந்த பாடகருமான எஸ். சி. கிருஷ்ணன் இனிமையாகப் பாடினார். ராவ்பகதுரர் சம்பந்தமுதலியார் அவர்கள் நாடக அரங்கின் சின்னம் வரையப் பெற்ற மஞ்சள் வண்ண நாடகக் கலைக் கொடியினை அரங்கிற்கு வெளியே உயர்த்தி வைத்துவிட்டு